இந்த இந்தியா யாருக்கானது? பிப்ரவரி 21ம் தேதியே வந்த ஐரோப்பியர்கள் மீது பீய்ச்ச முடியுமா?

சிவராத்திரி விழாவுக்கு ஜக்கி வரவழைத்த அயல்தேச ஆட்கள், நடிகைகள் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வந்துபோனார்கள். அரசு 15/2/2020 க்குப் பின்னர் இந்தியா வந்தவர்களை Quarantine செய்யவும், அயல்தேசத்தினருடன் Contact இருக்குமாயின் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்துகிறது. ஜக்கியின் சிவராத்திரி நடந்தது 21/2/2020. எனக்கிருக்கும் ஒரே கேள்வி. டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் வந்த அப்பாவி ஏழைகள், பார்ப்பனர் அல்லாதவர்களை பிடித்து sanitizer ரை ஆடு மாடு ,வண்டி கழுவுவது போல் பீய்ச்சி அடிக்கிறது அரசு. இதேபோல் ஒருவர், ஒரே ஒரு
 

இந்த இந்தியா யாருக்கானது? பிப்ரவரி 21ம் தேதியே வந்த ஐரோப்பியர்கள் மீது பீய்ச்ச முடியுமா?சிவராத்திரி விழாவுக்கு ஜக்கி வரவழைத்த அயல்தேச ஆட்கள், நடிகைகள் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வந்துபோனார்கள். அரசு 15/2/2020 க்குப் பின்னர் இந்தியா வந்தவர்களை Quarantine செய்யவும், அயல்தேசத்தினருடன் Contact இருக்குமாயின் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்துகிறது.

ஜக்கியின் சிவராத்திரி நடந்தது 21/2/2020. எனக்கிருக்கும் ஒரே கேள்வி.

டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் வந்த அப்பாவி ஏழைகள், பார்ப்பனர் அல்லாதவர்களை பிடித்து sanitizer ரை ஆடு மாடு ,வண்டி கழுவுவது போல் பீய்ச்சி அடிக்கிறது அரசு. இதேபோல் ஒருவர், ஒரே ஒரு ஜக்கியின் விருந்தினரை பிடித்து தண்ணீர் அடிக்குமா?

இத்தனைக்கும் அவர்களுக்கு தான் Risk of Exposure அதிகம், அதீதம். அத்தனை ஐரோப்பியர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்கள் கால் கடுக்க நடந்து செல்லும் சூழல் வராது என்று தெரியும். ஆனால் அவர்கள் மீது அஃறிணைகள் மேல் தண்ணீர் பீய்ச்சுவதுபோல் இங்கே பீய்ச்ச முடியுமா?

அப்படி முடியாது. தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஐரோப்பியனிடம் Contact ஏற்படுத்த வாய்ப்பில்லாத, விமானம் ஏற வழியே இல்லாத ஒரு ஏழை ஜனத்திரள் மேல் மட்டும் ஆடு மாடுகள் மேல் நீரடிப்பதுபோல் அடிக்க முடியுமென்றால் இந்த இந்தியா யாருக்கானது ?

சமத்துவம் என்பது காசு உள்ளவனுக்கு கால் அமுக்குவது தானா ?

– உமா மகேஷ்வரன் பன்னீர்செல்வம்

A1TamilNews.com

From around the web