உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

ஆரம்பித்து விட்ட கோடை வெயிலையும், பரவிக் கொண்டிருக்கும் நோய்த் தொற்றையும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு எளிதாக விரட்டியடிக்கலாம். உடலின் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு இருந்தாலே எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை வந்து சேரும் என்பது உறுதி. அந்த வகையில் நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பொருட்கள் பூண்டு நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதிலும், நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதிலும்
 

உடலில்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

ரம்பித்து விட்ட கோடை வெயிலையும், பரவிக் கொண்டிருக்கும் நோய்த் தொற்றையும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு எளிதாக விரட்டியடிக்கலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு இருந்தாலே எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை வந்து சேரும் என்பது உறுதி.
அந்த வகையில் நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பொருட்கள்

பூண்டு
நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதிலும், நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் பூண்டின் பங்கு மிகவும் அபாரமானது. பூண்டில் நிறைந்திருக்கும் அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது.

இஞ்சி
இஞ்சியில் நிறைந்து காணப்படும் ஆண்டிஆக்ஸிடெண்ட்டுகள் நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

தயிர்
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் அதிகம். செரிமான உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்வதில் தயிருக்கு குறிப்பிட்ட பங்கு உண்டு.

பார்லி, ஓட்ஸ்
நார்ச்சத்து நிறைந்துள்ள பார்லியும், ஓட்ஸும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

டீ, காபி
பால் கலக்காத டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை.

சர்க்கரைவள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டிருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

காளான்
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன.

பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகள் பழங்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

இஞ்சி, பூண்டு,பால் கலக்காத டீ, காபி, பார்லி,ஓட்ஸ், காளான்கள், பழங்கள், எலுமிச்சை தவிர பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள் இவற்றில் ஏதாவது சிலவற்றை நமது தினசரி உணவில் சேர்த்து வந்தாலே போதும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமான வளமான வாழ்வை வாழமுடியும்.

http://www.A1TamilNews.com

From around the web