பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்குமா? அமைச்சர் தகவல்!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ தொடங்கியது. மாநிலங்களவை கூட்டத்திற்கு மாஸ்க் அணிந்து வரக்கூடாது என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அதிரடியாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். கொரோனா
 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்குமா? அமைச்சர் தகவல்!!பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ தொடங்கியது.  மாநிலங்களவை கூட்டத்திற்கு மாஸ்க் அணிந்து வரக்கூடாது என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அதிரடியாக அறிவித்தார். 

எதிர்க்கட்சிகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. 

வழக்கமாக  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.  கொரோனா  பரவல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்விகள்  எழுந்துள்ளன.

இந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என்று  பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை, மாநிலங்களவை கூட்ட அரங்கத்திற்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி உறுப்பினர்கள் உட்கார வைக்கப்படுவார்கள் என்றும், உள்ளே இடம் இல்லாதவர்களுக்கு மத்திய மண்டபத்தில் உள்ள இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் அங்கேயிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web