ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் டார்க் மோட் வசதி!வாட்ஸ் அப் அதிரடி அறிமுகம்!

உலகில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள செயலிகளில் வாட்ஸ் அப் முண்ணனியில் உள்ளது. தற்போது வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிதாக டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசதிகள் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன்
 

ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் டார்க் மோட் வசதி!வாட்ஸ் அப் அதிரடி அறிமுகம்!லகில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள செயலிகளில் வாட்ஸ் அப் முண்ணனியில் உள்ளது. தற்போது வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிதாக டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வசதிகள் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். கணினியில் வாட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும், தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ள முடியும். வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி போன்ற பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கியுள்ளது.

A1TamilNews.com

From around the web