அடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்!

நியூஸ் தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற பெயரில் விதண்டாவாதம் செய்து வரும் நெறியாளர்களும் பங்கேற்பாளர்களும் பேசும் பேச்சுகள் பார்வையாளர்களை கூச்சப்படுத்துகிறது. ஊடகம் என்றால் அறம் என்ற நிலை மாறி, அஜெண்டா என்றாகிவிட்டது. ஏதாவது ஒரு அஜெண்டாவை முதலிலேயே தீர்மானித்து விட்டு அதற்கேற்றார் போல் விவாதத் தலைப்பு, விவாதிப்பவர்கள், விவாதத்தின் போக்கு, முடிவு என அனைத்தையும் நெறியாளரும் அவருடைய டீமும் முடிவு செய்து விட்டு ஆரம்பிப்பதாகவே தெரிகிறது. டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த
 
அடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்!
நியூஸ் தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற பெயரில் விதண்டாவாதம் செய்து வரும் நெறியாளர்களும் பங்கேற்பாளர்களும் பேசும் பேச்சுகள் பார்வையாளர்களை கூச்சப்படுத்துகிறது. ஊடகம் என்றால் அறம் என்ற நிலை மாறி, அஜெண்டா என்றாகிவிட்டது. ஏதாவது ஒரு அஜெண்டாவை முதலிலேயே தீர்மானித்து விட்டு அதற்கேற்றார் போல் விவாதத் தலைப்பு, விவாதிப்பவர்கள், விவாதத்தின் போக்கு, முடிவு  என அனைத்தையும் நெறியாளரும் அவருடைய டீமும்  முடிவு செய்து விட்டு ஆரம்பிப்பதாகவே தெரிகிறது.
 
டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த நிகழ்வை எப்படி தமிழக ஊடகங்கள் விவாதம் செய்யும் என்று வாட்ஸ் அப் சிட்டிசன் ஒருவரின் பதிவைப் பாருங்களேன். 
 
சோனியா – ஸ்டாலின் – ராகுல் சந்திப்பை முன்னிறுத்தி பத்து கேள்விகளை முன் வைக்கிறது.. 
 
1: ராகுல் அருகில் நிற்காமல், விலகி நிற்கிறார் கனிமொழி. ஸ்டாலினுடன் மோதலா..? 
 
2: ஸ்டாலினுக்கு நேர் எதிரில் நிற்கிறார் ஆ.ராசா. என்ன காரணம்.?
 
3: ஆ.ராசா ஏன் கருப்பு ஸ்வெட்டர் அணிந்துள்ளார்? காங்கிரஸ் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடா.? 
 
4: ஸ்டாலின் ஏன் கையில்லாத ஸ்வெட்டர் அணிந்துள்ளார்..? கை சின்னத்தை அவமதிக்கிறாரா..?
 
5: பொருளாளர் துரைமுருகன் அவர்களை டெல்லி அழைத்து செல்லாதது ஏன்? துரைமுருகனை புறக்கணிக்கிறதா திமுக?
 
6:ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு மட்டும் ஸ்வெட்டரோ, சால்வையோ அணிய கொடுக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன? திட்டமிட்டு குளிரில் நடுங்க வைக்கப்பட்டாரா ஆர்.எஸ். பாரதி? புறக்கணிக்கப்படுகிறாரா ஆர்.எஸ் பாரதி? 
 
7: கனிமொழி மஞ்சள் வண்ண சேலை மற்றும் சால்வை அணிந்திருப்பது ஏதேனும் குறியீடா..? 
 
8: ஜெயலலிதா அம்மையாருக்கு பிடித்த பச்சை கலர் ஸ்வெட்டரை ராகுல் அணிந்திருப்பதற்கு என்ன காரணம்? ஸ்டாலினை மனதை புண்படுத்த ராகுல் செய்த செயலை திமுக தொண்டர்கள் ஏற்பார்களா?
 
9: ஸ்டாலின் அவர்களே வேட்டி அணிந்திருக்கும் போது TR.பாலு அவர்கள் பேண்ட் அணிந்து சென்றதன் நோக்கம் என்ன? 
 
10 :ஸ்டாலின் கைகளை ராகுல் இறுக பற்றியிருப்பது எதை காட்டுகிறது?
கூட்டணியில் குழப்பம் வருமா? 
 
கருத்துரையாளர்கள் : மாலன், கோலாகல ஸ்ரீ வாசன், ரவீந்திரன் துரைசாமி, பா.லட்சுமணன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
 
நெறியாளர்கள்:
நியூஸ் 18 குணசேகரன்
நியூஸ் 7 விஜயன் 
புதிய தலைமுறை கார்த்திகைசெல்வன்
தந்திடிவி ஹரிகரன்
 
அடேங்கப்பா, இப்படி ஒரு விவாதம் நடந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை
 
நன்றி : வாட்ஸ் அப் பகிர்வு

From around the web