ரஜினி – சிவா கூட்டணியில் ஒரு முரட்டுக்காளை? அல்லது முள்ளும் மலரும்? #தலைவர்168

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளராக சார்லி சாப்ளின் படத்தின் மூலம் அறிமுகமான சிவா, ஏராளமான தெலுங்குப்படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனராக அறிமுகமானது சவுர்யம் என்ற தெலுங்கப்படத்த்தில் தான். இரண்டு தெலுங்குப்படங்களை இயக்கிய பிறகே சிறுத்தை மூலம் தமிழுக்கு வந்தார். சிறுத்தை, வீரம், விஸ்வாசம் படங்களில் கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படங்களாக இயக்கியுள்ளார் சிவா.
 

ரஜினி – சிவா கூட்டணியில் ஒரு முரட்டுக்காளை? அல்லது முள்ளும் மலரும்? #தலைவர்168சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளராக சார்லி சாப்ளின் படத்தின் மூலம் அறிமுகமான சிவா, ஏராளமான தெலுங்குப்படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனராக அறிமுகமானது சவுர்யம் என்ற தெலுங்கப்படத்த்தில் தான். இரண்டு தெலுங்குப்படங்களை இயக்கிய பிறகே சிறுத்தை மூலம் தமிழுக்கு வந்தார்.

சிறுத்தை, வீரம், விஸ்வாசம் படங்களில் கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன், சென்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படங்களாக இயக்கியுள்ளார் சிவா. ரஜினியுடன் இணையும் படத்திலும் கிராமத்துப் பின்னணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட குடும்பப் பின்னணியில் கதை உருவாகியுள்ளதாம்.

ரஜினிக்கு தங்கைப் பாசம் கொண்ட  படங்கள் என்றால் சூப்பர் ஹிட் தான் என்பது பைரவி முதலாகவே தொடர்ந்து வருகிறது. ரஜினி நடித்த பைரவி, குப்பத்து ராஜா, முள்ளும் மலரும், தர்மயுத்தம், காளி, சிவப்பு சூரியன், பாயும் புலி, நான் மகான் அல்ல,  நான் சிகப்பு மனிதன், அண்ணாமலை, படையப்பா என தங்கைப் பாசம் உள்ள படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் ஆகும். 

தலைவர் 168 ம் அண்ணன் தங்கைப் பாசம் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுவதால் முள்ளும் மலரும் காளி போன்ற அதிரடியாக கேரக்டராக இருக்குமா அல்லது முரட்டுக் காளை கிராமத்து காளையன் போல் இருக்குமா போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. முரட்டுக் காளையில் ரஜினி நடித்த  தம்பிகள் மீது பாசம் கொண்ட காளையன் போன்ற கேரக்டரில் தான் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத் நடித்திருப்பார்.

எஜமான் படத்திற்கு பிறகு கிராமத்து பின்னணியிலான குடும்ப செண்டிமெண்ட் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிராமத்துக் கதையுடன் களமிறங்குகிறார்.

ரஜினிகாந்த், சிவா, சன்பிக்சர்ஸ் நிறுவனம் இணையும் புதிய படத்தின் முதல்கட்ட வேலைகள் தீபாவளிக்கு பின் தொடங்குகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web