அடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளிவரும் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக குடும்ப நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதை தயாரிக்கிறது. அரசியல் திட்டங்கள் என்னாச்சு என்ற கேள்விகளை ஊடகங்கள் பல எழுப்பியுள்ளன. சிலர் ரஜினி அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டார் என்பது போலவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்தைப் பொறுத்தவரையிலும் அரசியலில் இறங்குவது பற்றி எந்த பின்வாங்குதலும் இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறாராம். சொன்னபடியே தனிக்கட்சி ஆரம்பித்து
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளிவரும் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக குடும்ப நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதை தயாரிக்கிறது.

அரசியல் திட்டங்கள் என்னாச்சு என்ற கேள்விகளை ஊடகங்கள் பல எழுப்பியுள்ளன. சிலர் ரஜினி அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டார் என்பது போலவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஜினிகாந்தைப் பொறுத்தவரையிலும் அரசியலில் இறங்குவது பற்றி எந்த பின்வாங்குதலும் இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறாராம். சொன்னபடியே தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்பதில் உறுதியாகவே இருக்கிறாராம்.

2017 டிசம்பரில் அரசியல் முடிவு பற்றி அறிவித்த போது, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிச்சயம் கவிழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஓபிஎஸ் தரப்பின் தனி ஆவர்த்தனத்துடன் அன்றைய அரசியல் சூழலும் அப்படித்தான் இருந்தது. அதனாலேயே விரைவில் தேர்தல் வந்து விடும் என்ற எண்ணத்தில் அரசியல் பற்றிய முடிவையும், ரஜினி மக்கள் மன்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அன்றைய நிலையில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வந்து விடும் என்றே அனைவரும் நம்பினார்கள். ரஜினியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனாலும் பாராளுமன்றத் தேர்தல் மட்டும் வந்தால் அப்போதைய நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்பேன் என்று முன்கூட்டியே சொல்லியும் விட்டார்.

இடைத்தேர்தல்களில் வெற்றி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை, அதிமுகவினரின் நம்பிக்கையை பெற்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் ஆதரவு என்ற நிலையில் 2021க்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் வருவதற்கான அறிகுறியே இல்லை.

இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே தேர்தல் வரப்போகும் என்ற நிலையில் இப்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே ரஜினிகாந்த் கருதுகிறாராம். எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருக்கிறாரம். ரஜினி மக்கள் மன்றத்தினரின் நடவடிக்கைகளுக் கண்கொத்தி பாம்பாக கவனிக்கப்படுகிறதாம்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது புத்தம் புதுப் பொலிவுடன் புதிய அமைப்பாக கட்சியை தொடங்கப் போகிறாராம். அதிகாரக்குவியலை தடுக்கும் வகையிலும் மக்கள் பணியாற்றுபவர்களுக்குத் தான் தொகுதி வாரியாக பதவிகள் வழங்கப்படுமாம். தமிழருவி மணியனும் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரும் முன்வைத்த திட்டப்படியே தொகுதி மட்டத்திலேயே நிர்வாக அமைப்பு இருக்குமாம்.

மாவட்ட அளவில் பொறுப்புகள் இருந்தால் கூடுதல் சுமை, பணத்தேவை, அதிகாரக்குவியல் போன்ற பாதகங்களையும் அலசிப் பார்த்துள்ளாராம். கட்சிக்காக பணம் செலவழித்தால், பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழியைத் தான் பார்ப்பார்கள் என்பதால், கட்சிக்கான செலவை கட்டுப்படுத்தும் வகையிலும் அமைப்பை உருவாக்கப் போகிறாராம். 

எப்படிப் பார்த்தாலும் அடுத்த ஆண்டு இறுதியிலேயே அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அது வரையிலும் அறிவிக்கப்பட்ட புதிய படத்துடன் மேலும் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து விடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.

அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வெற்றி பெறுவது அரசியலுக்கு உதவியாகவே இருக்கும். எம்ஜிஆர் போல் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பிறகு கூட ஒரு படம் வெளிவந்தாலும் பரவாயில்லை என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்களாம்.

இப்போதைக்கு படங்கள்.. அடுத்த ஆண்டு இறுதியில் அரசியல் கட்சி.. அது வரையிலும் அமைதியாக அரசியல் திட்டங்கள் தீட்டுதல் என்று சீரான பாதையில் போய்க் கொண்டிருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.

– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

From around the web