அவார்டு வாங்கவாவது வருவீங்களா கமல் ஹாசன்?

உன்கிட்ட ஓப்பனிங் நல்லாருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா என்பது கமலின் அரசியல் அவதாரத்துக்கு சரியாக பொருந்தும் போல… மிக வேகமாக டாப் கியர் எடுத்த வண்டி எந்த முட்டுச்சந்தில் கிடக்கிறது என்பதே தெரியவில்லை. 2017 இல் திடீர் அரசியல் அவதாரம் எடுத்து அதிமுக அமைச்சர்களை விமர்சித்தார் கமல்ஹாசன். பிக்கப் எடுத்து டாப் கியரில் ட்விட்டரில் அரசியல் செய்த கமல்ஹாசன் திடீரென்று எண்ணூரில் விசிட் அடித்தார். ஆனால் அதன் பின் அவரிடம் இருந்து ஒரு ட்விட் கூட வரவில்லை.
 

அவார்டு வாங்கவாவது வருவீங்களா கமல் ஹாசன்?

உன்கிட்ட ஓப்பனிங் நல்லாருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா என்பது கமலின் அரசியல் அவதாரத்துக்கு சரியாக பொருந்தும் போல… மிக வேகமாக டாப் கியர் எடுத்த வண்டி எந்த முட்டுச்சந்தில் கிடக்கிறது என்பதே தெரியவில்லை.

2017 இல் திடீர் அரசியல் அவதாரம் எடுத்து அதிமுக அமைச்சர்களை விமர்சித்தார் கமல்ஹாசன். பிக்கப் எடுத்து டாப் கியரில் ட்விட்டரில் அரசியல் செய்த கமல்ஹாசன் திடீரென்று எண்ணூரில் விசிட் அடித்தார். ஆனால் அதன் பின் அவரிடம் இருந்து ஒரு ட்விட் கூட வரவில்லை. முக்கியமாக மீனவர்கள் ஆயிரக்கணக்கில் காணாமல் போய் மாயமான போது கூட கமல் ‘சப்ஜெக்டாக’வே இருந்தார். விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு விஷயத்திலும் வாயே திறக்கவில்லை. விஷால் திடீரென்று களத்தில் குதித்த அதிர்ச்சியில்தான் கமலுக்கு பேச்சு வராமல் போனது என்று ஒரு பேச்சு ஓடுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு வார இதழ் அவருக்கு சிறந்த மனிதர் 2017 விருது அறிவித்திருக்கிறது. அந்த வார இதழில்தான் அரசியல் பற்றி தொடர் ஒன்றைத் தொடங்கினார் கமல். ஆரம்பத்தில் தீவிர அரசியல் பேசியவர் இந்து தீவிரவாதம் பிரச்னைக்கு பிறகு தொடரிலும் சினிமா பக்கம் வந்துவிட்டார். ஆக, இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அவார்டு வாங்கவாவது வருவீங்களா கமல் சார்?

From around the web