தினமும் வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உலகளவில் மக்கள் பெருமுயற்சிகளை செய்து வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தை பேண மக்கள் பெருமளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் உடலின் வெப்பநிலை உயரும் இதனால் உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறத் துவங்கும். மேலும் உடலின் நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடலும் சுத்தமாகிறது. சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடிப்பதால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். மேலும் செரிமானப் பிரச்சனையினால் வரும் தலைவலி எப்பவும் வராது. அல்சர்
 

தினமும் வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!?டலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உலகளவில் மக்கள் பெருமுயற்சிகளை செய்து வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தை பேண மக்கள் பெருமளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் உடலின் வெப்பநிலை உயரும் இதனால் உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறத் துவங்கும். மேலும் உடலின் நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடலும் சுத்தமாகிறது.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடிப்பதால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். மேலும் செரிமானப் பிரச்சனையினால் வரும் தலைவலி எப்பவும் வராது.

அல்சர் இருப்பவர்கள் கூட அதனால் ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்க மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். அசைவம் போன்ற செரிக்க கடினமான உணவுகளை சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடிப்பதால் சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகி விடும்.

பார்லி சேர்த்து வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர மிருதுவான , பொலிவான சருமத்தை பெறலாம். எந்த அழகு நிலையத்திற்கும் செல்லத் தேவையில்லை.

வெந்நீரை ஒரு வாளியில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டு கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுக்க பித்தவெடிப்புக்கள் மற்றும் கால் வலி குறைவதோடு நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.

ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும் போதும் மிதமான சூட்டில் வெந்நீரைக் குடித்து வர உடலில் தேவையற்ற கழிவுகள் சேருவதைத் தடுக்கும்.

A1TamilNews.com

From around the web