தொன்மை மொழியின் புத்தாண்டு துவக்கம் நன்மை பொழியும் நம்புவோம்!

புத்தாண்டு இன்று புலர்ந்ததைக் கண்டு சத்தம் எழுப்பி மகிழ்வோம் இத்தனை ஆண்டு ஈயாத வாழ்த்து மொத்தம் தப்பாது சொல்வோம் இன்றமிழ் ஆண்டு இனிதாய் துவங்க இன்னல்கள் அனைத்தும் கடப்போம் அன்னைத் தமிழாண்டு அழகாய் பூக்க துன்பங்கள் தீயில் எரிப்போம் வானம் மாரி கொட்டும் போது கானம் பாடி நனைவோம் சீனம் கொடுத்த கோவிட் வினையில் தானம் மனிதம் கற்போம் வசந்தத்தின் பூக்கள் வாசனை நுகர்ந்து கசந்த நாட்கள் தொலைப்போம் கொசகொச வென்று குழம்பி நிற்காமல் எசப்பாக்காள் பலவும்
 

தொன்மை மொழியின் புத்தாண்டு துவக்கம்  நன்மை பொழியும் நம்புவோம்!புத்தாண்டு இன்று புலர்ந்ததைக் கண்டு
சத்தம் எழுப்பி மகிழ்வோம்
இத்தனை ஆண்டு ஈயாத வாழ்த்து
மொத்தம் தப்பாது சொல்வோம்

இன்றமிழ் ஆண்டு இனிதாய் துவங்க
இன்னல்கள் அனைத்தும் கடப்போம்
அன்னைத் தமிழாண்டு அழகாய் பூக்க
துன்பங்கள் தீயில் எரிப்போம்

வானம் மாரி கொட்டும் போது
கானம் பாடி நனைவோம்
சீனம் கொடுத்த கோவிட் வினையில்
தானம் மனிதம் கற்போம்

வசந்தத்தின் பூக்கள் வாசனை நுகர்ந்து
கசந்த நாட்கள் தொலைப்போம்
கொசகொச வென்று குழம்பி நிற்காமல்
எசப்பாக்காள் பலவும் படிப்போம்

பச்சைப் புல்லின் செழுமை பார்த்து
அச்சம் தூரம் வைப்போம்
இச்சைக் கிளிகள் கொஞ்சல் ரசித்து
துச்சம் மரணம் என்போம்

சின்னச் சின்ன கனவுகள் வளர்த்து
இன்றினி வாழ்க்கை சுவைப்போம்
கன்னித் தமிழில் காதல் அனுப்பி
புன்னகை கடனாய்க் கேட்போம்

அள்ளி அணைத்து அன்பைக் கொட்டி
பிள்ளைகள் பேணி காப்போம்
வெள்ளை நிலவாய் விளங்கும் பெற்றோர்
உள்ளம் குளிரச் செய்வோம்

சுற்றி உள்ள சுற்றம் அனைத்தும்
பற்றிக் கொண்டு உயர்வோம்
உற்ற உறவுகள் உணர்வுகள் புரிந்து
குற்றம் காணாது வாழ்வோம்

வாழ்க்கை என்பது வளர்பிறை போலே
ஆழ்ந்திதை சிந்தனைச் செய்வோம்
சூழ்ந்த விஷநோயை விரட்டி யடித்து
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம்

இன்று இருப்பவர் இங்கில்லை நாளை
என்பதை நன்கு உணர்வோம்
அன்றாட வாழ்வை கொஞ்சூண்டு மாற்றி
அன்பின் விதைகள் தெளிப்போம்

தொன்மை மொழியின் புத்தாண்டு துவக்கம்
நன்மை பொழியும் நம்புவோம்
இன்னிசை பிறக்கும் இனியது நடக்கும்
கன்னித் தமிழாண்டை வரவேற்போம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

A1TamilNews.com

From around the web