ராகுல் காந்தி… நம்பிக்கை துளிர்க்கிறது!

இந்த வாரத்தின் ஒரு நாள் அதிகாலை. ஃபேஸ்புக்கில் வந்த அந்தப் பதிவை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் பகிர்ந்திருந்தார். படித்து முடித்தபோது, கண்ணோரங்கள் கசிந்திருந்தன. அந்தப் பதிவு: குஜராத் தேர்தலை ஒட்டி, அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் ராகுல். அதில் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தின் ஆசிரியர்களுடன் குறிப்பாக கல்லூரி ஆசிரியக் குழுக்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த சந்திப்பின்போது, ரஞ்சனா அவஸ்தி என்கிற பேராசிரியைக்கு ராகுல் காந்தியிடம், பேசுவதற்கு மைக் கிடைக்கிறது. “வெறும் 12 ஆயிரம் ரூபாய்
 

ராகுல் காந்தி… நம்பிக்கை துளிர்க்கிறது!

ந்த வாரத்தின் ஒரு நாள் அதிகாலை. ஃபேஸ்புக்கில் வந்த அந்தப் பதிவை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் பகிர்ந்திருந்தார். படித்து முடித்தபோது, கண்ணோரங்கள் கசிந்திருந்தன.

அந்தப் பதிவு:

குஜராத் தேர்தலை ஒட்டி, அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் ராகுல். அதில் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தின் ஆசிரியர்களுடன் குறிப்பாக கல்லூரி ஆசிரியக் குழுக்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த சந்திப்பின்போது, ரஞ்சனா அவஸ்தி என்கிற பேராசிரியைக்கு ராகுல் காந்தியிடம், பேசுவதற்கு மைக் கிடைக்கிறது. “வெறும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு 22 ஆண்டுகளாக பகுதி நேர பேராசிரியையாக வேலை பார்த்து வரும் தங்களைப் போன்றவர்களுக்கு, ஓய்வூதியம் என்கிற அடிப்படை உரிமையும் குஜராத் அரசால் பறிக்கப்படுகிறது,” என குமுறி அழுகிறார்.

அந்த அறையின் மேடையில் நின்றுகொண்டிருக்கும் ராகுல், “சில கேள்விகளுக்கு வெற்று வார்த்தைகளால் பதில் அளிக்க முடியாது,” என்றபடியே தன்னுடைய மைக்கை மேசையில் வைத்துவிட்டு ரஞ்சனா இருக்குமிடம் நோக்கி நடக்கிறார்.

அருகில் சென்று, கண்களில் கண்ணீருடன் நிற்கும் ரஞ்சனாவை ஆதூரமாக அணைத்துக் கொள்கிறார். அவருடைய பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார். ராகுலின் இந்த பேரன்பை தான் எதிர்பார்க்கவேயில்லை என்று பத்திரிகையாளர்களிடம் பூரிக்கிறார் ரஞ்சனா.

ராகுல் காந்தியின் உடல்மொழி அற்புதமானது. வாஞ்சை நிரம்பியது. அதில் ‘சங்கிமங்கி’களைப் போன்ற ஆவேசமா, நடிப்போ துளியும் இருக்காது. அந்த நிமிடத்தின் அன்பு மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். அந்த அன்புதான் எளிய மக்களை நோக்கி அவரை செலுத்துகிறது. அந்த அன்புதான் ‘பப்பு’ என்று தனிமனித தாக்குதலில் ஈடுபடும் ‘சங்கிமங்கி’களின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து நிற்க வைக்கிறது.

வாழ்த்துக்கள் ராகுல். மதவாத சக்திகளிடம் இருந்து உங்கள் தலைமையிலான காங்கிரஸ், மக்களை விடுவிக்கட்டும்.

– இப்படி முடிந்திருந்தது. ஒரிஜினலாகப் பதிவு செய்திருந்தவர் கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர்.

ராகுல் காந்திக்கு, அவரது தலைமையிலான காங்கிரஸுக்கு ஆதரவா? நடந்த இனப்படுகொலையை மறந்துவிட்டீர்களா? என்றெல்லாம் ஆவேசக் குரல்கள் எழுந்துள்ளன. அதை மறக்கவில்லை. அதில் இந்தியாவின் பங்கு சிறிதுதான். சர்வதேச நாடுகளின் கூட்டு அழிப்பு அது.

இப்போது இந்தியாவில் பாஜக அரசின் தலைமையில் நடப்பது மிகப் பெரிய அட்டூழியம். நாடு மோசமான பாதையிலிருந்து, கொடூரமான பாதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாட்டைக் காக்க முதலில் வலுவான தலைமை என்ற பெயரில் கார்ப்பொரேட் கம்பெனிகளின் பிஆர்ஓக்கள் தேவையில்லை. மனிதாபிமானம், மக்களின் துயரம் புரிந்த மனசு கொண்ட தலைமைதான் தேவை. ராகுல் மீது மக்களுக்கு அந்த நம்பிக்கை வந்திருக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கு நாடு திரும்பும் அவசியமும் நெருங்குகிறது.

From around the web