வாரத்தில் ரெண்டு நாள் மட்டுமே கடைக்கு வரலாம் – அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!

கொரொனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அரியலூர் மாவட்ட்ட ஆட்சித் தலைவர் ரத்னா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கும்
 

வாரத்தில் ரெண்டு நாள் மட்டுமே கடைக்கு வரலாம் – அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!கொரொனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அரியலூர் மாவட்ட்ட ஆட்சித் தலைவர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கும் பச்சை, நீலம், மஞ்சள் நிற அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ள ஆட்சியர், ஒவ்வொரு கலர் அடையாள அட்டை குடும்பத்தினருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் என பிரித்துள்ளனர்

“நிற அட்டை உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன், நீல நிறத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளி, மஞ்சள் நிற அட்டைக்கு புதன் மற்றும் சனிக் கிழமை என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை உள்ள குடும்பதாரர்களில் ஒருவர் மட்டும் குறிப்பிட்ட நாட்களில்  அத்தியாவசிப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம். இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கண்காணிப்புடன் இந்த அட்டவணை முறை நடைமுறைப்படுத்தப்படும். 

மேலும் 1077 எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிப் பொருட்கள் வீட்டிற்கே வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு தரப்பில் முழு வீச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நோயின் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.

A1TamilNews.com

From around the web