நவம்பர் 8 – 14 வார இராசிபலன்கள் … மன அமைதி கிடைக்குமா?

வார இராசி பலன் (8-11-2019 முதல் 14-11-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மன அமைதி குறைந்த வாரம். உடல்நலம் பாதிக்க வாய்ப்புண்டு. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. கடன்கள் தொல்லை தரும். எதிரிகளின்
 

 வார இராசி பலன் (8-11-2019 முதல் 14-11-2019 வரை)

நவம்பர் 8 – 14 வார இராசிபலன்கள் … மன அமைதி கிடைக்குமா?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மன அமைதி குறைந்த வாரம். உடல்நலம் பாதிக்க வாய்ப்புண்டு. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் காணப்படும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. கடன்கள் தொல்லை தரும். எதிரிகளின் பயம் அதிகமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களினால் நன்மை உண்டாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா,சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 8, 9, 13

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நிதிநிலை கவலையைத் தரும். உறவினர்களின் உதவி கிடைக்காது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. ரேஸ், லாட்டரி நஷ்டத்தைத் தரும். குழந்தைகளினால், பிரச்சினை உண்டாகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும்.
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 12, 13, 14

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கும். மனம் அமைதியின்றி இருக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும்.குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும்.
 
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி வாய்ப்பு கிடைக்காது. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 8, 11, 14 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிரயாணத்தில் தடைகள் காணப்படும். இடமாற்றம் நன்மை தராது. நேர்முகத் தேர்வு வெற்றி தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 8,11, 12

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும்.
ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நிலவும். எதிர்பார்க்கும் பணவரவுகள் தாமதமாகும். வங்கியில் நிதிநிலை குறையும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வர்.
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். திருமணம் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 12, 13
 
சந்திராஷ்டமம் : 8, 9, 10  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

முயற்சிகளில் தோல்வி ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பம் உண்டாகும். பதவி உயர்வு தாமதமாகும். சில பதவிகள் பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு சரியும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.

உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 8, 11, 12, 14 
 
சந்திராஷ்டமம் : 11, 12, 13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உறவினர்களிடையே பழகும் போது கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு சோதனையான காலம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 13

சந்திராஷ்டமம் : 13, 14, 15  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்,. உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். சில பணவரவு தாமதமாகும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 

இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 13

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நிலபுலன்களின் மூலம் பணவரவு உண்டாகும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபகரமாக அமையும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் பின்னடைவு உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 12, 13
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகள் எல்லாம் நன்மையில் முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். இடமாற்றம் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சில பதவிகள் பறிபோகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. 
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். 

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணத்தில் கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். பயிர்த் தொழில் பலன் தராது. உத்தியோகத்தில் கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். 

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11
  
நவம்பர் 8 – 14 வார இராசிபலன்கள் … மன அமைதி கிடைக்குமா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:
நவம்பர் 1 -7 வார இராசிபலன்கள்…

2019 – 20ம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்:

From around the web