ஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்?

வார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். சில கடன்கள் தொல்லை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம்
 

 வார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை)

ஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். சில கடன்கள் தொல்லை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். தொழில் லாபகரமாக அமையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 6, 8

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் மன அமைதிக் குறைவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். கல்வியில் தடைகள் காணப்படும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.

வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. சிலருக்கு பதவி பறிபோகும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 9

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சினை ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். 

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 8, 9

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே சில மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும்.  எதிர்பாராத பணம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 7, 9

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

 
புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றகரமாக நடைபெறும். கடன் தொல்லை நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6

சந்திராஷ்டமம் : 3, 4  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமானாலும், சாதகமாக வரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. 

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 8
 
சந்திராஷ்டமம் : 4, 5, 6  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
 
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். பயிர்த் தொழில் நன்மை  தராது.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்களின் உதவி தாராளமாகக் கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 5
 
சந்திராஷ்டமம் : 7, 8, 9  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்அனுஷம்,  கேட்டை)

முயற்சிகளில் சில தடைகள் காணப்படும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். நிதிநிலை உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். நண்பர்களின் மூலமாக நன்மைகள் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும்.  தொழில் லாபகரமாக இயங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 4, 7

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் நஷ்டம் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  வழக்குகள் வெற்றிகளைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்,  மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். சேமிப்பு குறையும். இடமாற்றம் நன்மை தராது. பிரயாணம் செலவினங்களைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும்.

பயிர்த் தொழில் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில பகைகள் வந்து சேரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். சில பதவிகள் தேடி வரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 5, 7, 9

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

எல்லா முயற்சிகளும் நன்மையில் போய் முடியும். பணவரவு பலவகைகளிலிருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும். புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். வாகனம், வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடு செய்ய நேரிடும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். பங்குச் சந்தை நல்ல பலன் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 6,7,9
 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள். 

ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் , தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 3,7,9
 
ஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 
2020 புத்தாண்டு பலன்கள்
 
 

From around the web