வெயிலை விரட்டியடிக்கும் தர்பூசணி அல்வா!

கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க எத்தனை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீரவே இல்லை .பழவகைகள் எடுத்துக் கொண்டாலும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களைத் தண்ணீர், பழரசம் குடிக்க வைப்பதற்குள் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது. குழந்தைகளுக்கு விருப்பமான முறையில் தர்ப்பூசணியில் அல்வா செய்து கொடுக்க தட்டும் காலி. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைத்து விடும். தர்பூசணி சீசன் என்பதால் எளிதில்கிடைக்கும். தேவையான பொருட்கள் : தர்ப்பூசணி –
 

வெயிலை விரட்டியடிக்கும் தர்பூசணி அல்வா!கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க எத்தனை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீரவே இல்லை .பழவகைகள் எடுத்துக் கொண்டாலும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களைத் தண்ணீர், பழரசம் குடிக்க வைப்பதற்குள் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

குழந்தைகளுக்கு விருப்பமான முறையில் தர்ப்பூசணியில் அல்வா செய்து கொடுக்க தட்டும் காலி. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைத்து விடும். தர்பூசணி சீசன் என்பதால் எளிதில்கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :
தர்ப்பூசணி – 1
நெய் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 கப்
ரவை – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
பால் – 1 கப்
பாதாம் , முந்திரி -தலா 10

செய்முறை
தர்பூசணியில் விதைகளை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி ரவை மற்றும் கடலை மாவு இரண்டையும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்த தர்பூசணியை ஊற்றி கிளற வேண்டும்.

சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால் இவற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.அல்வா பதம் வந்தவுடன் பாதாம், முந்திரியை வறுத்து சேர்க்க வேண்டும். சூடான, சுவையான தர்ப்பூசணி அல்வா தயார்.

A1TamilNews.com

From around the web