விமானம் தாங்கி கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சி! அதிர்ச்சியூட்டும் அமெரிக்கா!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடி வரும் வேளையில் அமெரிக்கா தென் சீனக் கடலில் இராணுவ விமானநிலையங்களை அமைத்து வருகிறது. தென் சீனக் கடல் பகுதிக்கு புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் உரிமை கோருகின்றன. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அணுசக்தியால் இயங்கக்கூடிய இரு விமானந் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவருகிறது. தற்போது அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும்
 

விமானம் தாங்கி கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சி! அதிர்ச்சியூட்டும் அமெரிக்கா!உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடி வரும் வேளையில் அமெரிக்கா தென் சீனக் கடலில் இராணுவ விமானநிலையங்களை அமைத்து வருகிறது.

தென் சீனக் கடல் பகுதிக்கு புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும்  உரிமை கோருகின்றன. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அணுசக்தியால் இயங்கக்கூடிய இரு விமானந் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவருகிறது. தற்போது  அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் பயிற்சிகளில் பங்கேற்று வருவது போர் அபாயம் சூழுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கி இருக்கிறது.

“பிராந்திய பாதுகாப்பிற்காகவும், எங்கள் நட்பு நாடுகளுக்கு ஒரு தெளிவான சமிக்ஞையைக் காண்பிப்பதற்காகவும் மட்டுமே கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளன” என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

A1TamilNews.com

From around the web