இந்தியா மறந்த விடுதலைப் போராளி வ.உ.சி.

வெள்ளையனைத் தீர்த்திட வேங்கையாய்ப் பொங்கிய வள்ளியப்பன் எங்கள் உலகநாதன் உன்னையின்று உள்ளம் மகிழ்ந்து உயரப் புகழ்ந்துநான் அள்ளித் தெளித்தேன் அமுது உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை பகுத்தறிவு கொண்டு பயன்படு – சூத்திரன் என்னும் பதத்தை அகற்றிடு என்று கப்பலோட்டிப் போனாய்க் கனிந்து மண்ணின் சுதந்திரம் மக்கள் உரிமைகள் வேண்டுமென்று செக்கிழுத்த செம்மல்நீ – மட்டுமிலை பெண்களுக்கு சொத்துரிமை பேதமின்றி வேண்டுமென்ற கண்ணயரா ஹெல்ம்ஸ்மேன் நீ ஒட்டப் பிடாரத்து ஒப்பற்றப் பிள்ளையாய் சட்டம் படித்திட்ட சத்திய மேதையாய்
 

இந்தியா மறந்த விடுதலைப் போராளி வ.உ.சி.

வெள்ளையனைத் தீர்த்திட வேங்கையாய்ப் பொங்கிய
வள்ளியப்பன் எங்கள் உலகநாதன் உன்னையின்று
உள்ளம் மகிழ்ந்து உயரப் புகழ்ந்துநான்
அள்ளித் தெளித்தேன் அமுது

உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை
பகுத்தறிவு கொண்டு பயன்படு – சூத்திரன்
என்னும் பதத்தை அகற்றிடு என்று
கப்பலோட்டிப் போனாய்க் கனிந்து

மண்ணின் சுதந்திரம் மக்கள் உரிமைகள்
வேண்டுமென்று செக்கிழுத்த செம்மல்நீ – மட்டுமிலை
பெண்களுக்கு சொத்துரிமை பேதமின்றி வேண்டுமென்ற
கண்ணயரா ஹெல்ம்ஸ்மேன் நீ

ஒட்டப் பிடாரத்து ஒப்பற்றப் பிள்ளையாய்
சட்டம் படித்திட்ட சத்திய மேதையாய்
எட்டிடச் செய்தாய் சுதந்திரப் பூவைநீ
கிட்டா வரம்நீ கிழக்கு

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web