கமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்!

நடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி, முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. கமலுடன் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விவேக் அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில்,
 

டிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி, முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. கமலுடன் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், விவேக் அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்-க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்,” என பதிவிட்டுள்ளார்.

இந்தியன் முதல் பாகத்தில் கவுண்டமணி பிரதான நகைச்சுவை நடிகராக கலக்கியிருப்பார். இந்தியன் 2 படத்தில், கவுண்டமணி இல்லை. அவருக்கு பதில் விவேக் நடிக்கிறார்.

– வணக்கம் இந்தியா

From around the web