விஸ்வாசம் விமர்சனம்

நடிகர்கள்: அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு இசை: டி இமான் தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கம்: சிவா அஜித்துக்காகவே மெனக்கெட்டு உருவாக்கப்பட்ட கதை. கொஞ்சம் கிராமியம், நிறைய செயற்கைத்தனம், அஜித்துக்கென்றே வலிந்து வைக்கப்பட்ட காட்சிகள், வசனங்கள் என இழுவையாக வந்திருக்கிறது விஸ்வாசம். இந்தத் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விஸ்வாச நண்பர்களான அஜித்தையும் இயக்குநர் சிவாவையும்தான் கேட்க வேண்டும். கதை ரொம்ப சிம்பிள். காதலித்து திருமணம் செய்த அஜித் – நயன்தாரா ஜோடி, மகள் பிறந்த பிறகு
 

விஸ்வாசம் விமர்சனம்

டிகர்கள்: அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு
இசை: டி இமான்
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம்: சிவா

அஜித்துக்காகவே மெனக்கெட்டு உருவாக்கப்பட்ட கதை. கொஞ்சம் கிராமியம், நிறைய செயற்கைத்தனம், அஜித்துக்கென்றே வலிந்து வைக்கப்பட்ட காட்சிகள், வசனங்கள் என இழுவையாக வந்திருக்கிறது விஸ்வாசம்.

இந்தத் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விஸ்வாச நண்பர்களான அஜித்தையும் இயக்குநர் சிவாவையும்தான் கேட்க வேண்டும்.

கதை ரொம்ப சிம்பிள்.

காதலித்து திருமணம் செய்த அஜித் – நயன்தாரா ஜோடி, மகள் பிறந்த பிறகு பிரிகிறது. மீண்டும் அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை.

எதற்காக அஜித் இவ்வளவு நரைத்த தாடி, முடியுடன் நடிக்கிறார் என்பது புரியவில்லை. பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. முதல் பாதியில் காமெடியாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரிதாக சிரிப்பு வரவில்லை. மகள் மீது பாசம் காட்டும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவென்ற திணிக்கப்பட்ட வசனங்களும் காட்சிகளும் எரிச்சலடைய வைக்கின்றன. தொப்பையைக் குறைங்க மிஸ்டர் அஜித்.

படத்தை இடைவேளைக்குப் பிறகு காப்பாற்றுபவர் நயன்தாராதான். அஜித் மகளாக வரும் அந்த குழந்தையும் அசத்துகிறார்.

மும்பையிலிருந்து தேனி மாவட்ட கிராமத்தைத் தேடி வரும் டாக்டரான நயன்தாரா, படிக்காத காட்டானாக, கட்டப்பஞ்சாயத்து செய்யும் அஜித்தை காதலித்து கல்யாணம் செய்வதெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.

அஜித்தின் துதிபாடிகளாக வரும் தம்பி ராமய்யா, ரோபோ சங்கர் நெளிய வைக்கிறார்கள். அப்புறம் விவேக்கும் வருகிறார். கடைசி வரை சிரிப்பு மட்டும் வரவே இலலை.

இமான் இசை கொடுமை. க்ளைமேக்ஸை எளிதில் யூகிக்க முடிவது இன்னொரு மைனஸ்.

விவேகத்திலாவது விழித்திருக்க வேண்டிய அஜித் – சிவா ஜோடி, விஸ்வாசத்தில் இன்னும் சறுக்கியிருக்கிறது.

Rating: 2.0/5.0

From around the web