‘திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போக பஸ் வேணும்’!

தூத்துக்குடி: தூத்துக்குடி தாலுகாவில் உள்ள ஒரு முக்கியமான ஊராட்சி குலையன்கரிசல் ஆகும். ஊராட்சிக்குட்பட்ட சிறு கிராமங்களுங்கும் திருச்செந்தூர் செல்ல நேரடி பஸ் போக்கு வரத்து இல்லை. தூத்துக்குடிக்கு சென்று அல்லது முள்ளக்காடுக்குச் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்துத் தான் செல்ல வேண்டும். தூத்துக்குடிக்குச் சென்று போவது என்றால் பயண தூரமும் அதிகம். குறைந்தது ஒரு மணி நேரமாவது கூடுதலாகும். முள்ளக்காடு செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லை.“எங்கள் ஊரிலேயே வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்துள்ள போதிலும் மாதந்த
 
‘திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போக பஸ் வேணும்’!
தூத்துக்குடி: தூத்துக்குடி தாலுகாவில் உள்ள ஒரு முக்கியமான ஊராட்சி குலையன்கரிசல் ஆகும். ஊராட்சிக்குட்பட்ட சிறு கிராமங்களுங்கும் திருச்செந்தூர் செல்ல நேரடி பஸ் போக்கு வரத்து இல்லை. தூத்துக்குடிக்கு சென்று அல்லது முள்ளக்காடுக்குச் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்துத் தான் செல்ல வேண்டும். தூத்துக்குடிக்குச் சென்று போவது என்றால் பயண தூரமும் அதிகம். குறைந்தது ஒரு மணி நேரமாவது கூடுதலாகும். முள்ளக்காடு செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லை.“எங்கள் ஊரிலேயே வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்துள்ள போதிலும் மாதந்த வெள்ளிக்கு திருச்செந்தூர் செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். எங்கள் முன்னோர்கள் மாதந்தோறும் நடந்தே திருச்செந்தூர் சென்றுள்ளார்கள். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு 200 பஸ்கள் தினந்தோறும் செல்லும் நிலையில் எங்கள் ஊர் வழியாக ஒரு பஸ் கூட இல்லை,” என்று ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு மாதமும் மாதந்த வெள்ளிக்கு திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து முள்ளக்காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கு பஸ் வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தக் கோரிக்கை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப் படாமலே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என மாறி மாறி வந்தாலும் திருச்செந்தூருக்குச் செல்வதற்கு பஸ் வசதி தான் கிடைத்த பாடில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

 

From around the web