சியான் விக்ரம் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கோப்ரா’!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் கோப்ரா. சியான் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பெரும் விலை கொடுத்து சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. கொரோனாவினால் படப்பிடிப்பு பணிகளும் கொஞ்சம் மீதி இருப்பதாகவும் கூறுகிறார்கள். அமானுஷ்ய பின்னணியில்
 

சியான் விக்ரம் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கோப்ரா’!டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் கோப்ரா. சியான் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பெரும் விலை கொடுத்து சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

சியான் விக்ரம் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கோப்ரா’!

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. கொரோனாவினால் படப்பிடிப்பு பணிகளும் கொஞ்சம் மீதி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சியான் விக்ரம் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கோப்ரா’!

அமானுஷ்ய பின்னணியில் த்ரில்லர் படமாக கோப்ரா உருவாகுவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  ரஷ்யாவிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சியான் விக்ரம் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கோப்ரா’!

லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். முருகதாஸுடன் 7ம் அறிவு, துப்பாக்கி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

A1TamilNews.com

From around the web