குடிபோதையில் பாலியல் தொல்லை… சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இலங்கை விதவைப் பெண்ணை திருமணம் செய்வேன் என்று சீமான் முன்னதாகக் கூறியிருந்தார். இடையில் நடிகை விஜயலட்சுமியுடன் காதல் என்று இருவரைப் பற்றியும் தகவல்கள் உலவியது. இருவரும் நெருக்கமாக சேர்ந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்தார் சீமான். தன்னை காதலித்து திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது
 

குடிபோதையில் பாலியல் தொல்லை… சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு!நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இலங்கை விதவைப் பெண்ணை திருமணம் செய்வேன் என்று சீமான் முன்னதாகக் கூறியிருந்தார். இடையில் நடிகை விஜயலட்சுமியுடன் காதல் என்று இருவரைப் பற்றியும் தகவல்கள் உலவியது. இருவரும் நெருக்கமாக  சேர்ந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்தார் சீமான். தன்னை காதலித்து திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது குற்றம் சுமத்தினார்.

தற்போது சீமான் பாலியல் தொல்லை கொடுத்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் விஜயலட்சுமி. தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த காலத்தில், குடித்து விட்டு வரும் சீமான் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியினரும் அவருக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு நீதி கிடைக்கும் வரை தன்னுடைய கேள்விகள் தொடரும் என்றும் கூறியுள்ளார் விஜயலட்சுமி. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சீமானிடம் கேள்வி கேட்டபோது, இது அசிங்கம், வேற கேள்விகளைக் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

எல்லா அரசியல்வாதிகளையும் விமர்சித்து வரும் சீமான் மீது குடித்து விட்டு போதையில் பாலியல் தொல்லை செய்தார் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

http://www.A1TamilNews.com

From around the web