பிரபல கிரிக்கெட் வீரராக நடிக்கும் விஜய் சேதுபதி!

சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், டோணி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை
 

மீப காலமாக இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், டோணி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க, தார் மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web