‘மிரண்டு போய் இருக்கிறேன்’ – ரஜினிகாந்த் பற்றி விஜய் சேதுபதி!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்றாக நடிக்கும் தமிழ் சினிமாவாக உருவாகிறது. தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிடப் படுகிறது. ரஜினிகாந்துடன் நடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள விஜய் சேதுபதி, தனது அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார். “ரஜினி சார் நடிக்க வந்து நாற்பது வருடங்களுக்கு
 

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்றாக நடிக்கும் தமிழ் சினிமாவாக உருவாகிறது. தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிடப் படுகிறது.

ரஜினிகாந்துடன் நடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள விஜய் சேதுபதி, தனது அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார்.

“ரஜினி சார் நடிக்க வந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிறதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டால், இந்தப் படம் தான் முதல் படம் மாதிரி அவர் நடிக்கிறார். ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஒவ்வொரு சீனுக்கும் மெனக்கெடுறார். மிரண்டு போய்தான் உக்காந்து இருக்கேன்.

அவர் வயசு வரும்போதேல்லாம், எனக்கு அவ்வளவு தூரம் சின்சியாரிட்டி இருக்குமா? நான் நடிப்பேனா? அவரை மாதிரி நார்மலாக இருக்க முடியுமா?ன்னு தெரியாது. அவர் தன்னடக்கமாக இல்லே, நார்மலா இருக்காரு. அந்த வேலைக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து செய்றாரு. வேலையைக் கூர்ந்து கவனிக்கிறாரு.

அவருக்குத் தெரியும், கார்த்திக் சுப்பராஜ் குடும்பமே ரஜினி சார் ரசிகர்கள். குறும்படம் எடுக்கும் போதே கார்த்திக் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கும் நல்லாவேத் தெரியும்

அப்படியிருந்துமே, “டைரக்டர் சார், நான் இதைப் பண்ணிக்கட்டுமான்னுதான் கேக்குறாருனாலும், கார்த்திக் சுப்பராஜை ஒரு இயக்குனராக, அவ்வளவு மரியாதை கொடுக்கிறாரு. தொழிலுக்கோ, கூட நடிக்கிற நடிகர் நடிகைகளுக்கோ சரி, அதுதான் ரஜினி சார்,” என்று விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

From around the web