நம்பியார் ‘சாமி’… எம்ஜிஆர், ரஜினிக்கு பிடித்தமான ‘வில்லன்’!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களாக முத்திரை பதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திரைக்கு வெளியேயும் வில்லனாகவே அறியப்பட்ட ஒருவர் மூத்த நடிகர் எம்.என். நம்பியார் அவர்கள். எம்ஜிஆர் படங்களின் பெரும் வெற்றிக்கு நம்பியாரின் வில்லத்தனமும் மிக முக்கிய காரணம். வில்லன் எவ்வளவு கொடூரமாக மக்களுக்குத் தெரிகிறாரோ, அது ஹீரோவின் மீதான மதிப்பை அதிகமாக உயர்த்திக் காட்டும் என்ற சூட்சமத்தை தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிந்து கொண்டவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். அதனால்
 

மிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களாக முத்திரை பதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திரைக்கு வெளியேயும் வில்லனாகவே அறியப்பட்ட ஒருவர் மூத்த நடிகர் எம்.என். நம்பியார் அவர்கள். எம்ஜிஆர் படங்களின் பெரும் வெற்றிக்கு நம்பியாரின் வில்லத்தனமும் மிக முக்கிய காரணம்.

வில்லன் எவ்வளவு கொடூரமாக மக்களுக்குத் தெரிகிறாரோ, அது ஹீரோவின் மீதான மதிப்பை அதிகமாக உயர்த்திக் காட்டும் என்ற சூட்சமத்தை தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிந்து கொண்டவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். அதனால் தான், அவருடைய படங்களில் வில்லன் நடிகர்களும் அதிக அளவில் பேசப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரும் வரையிலும் நம்பியார் என்பவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கொடூரமானவர் என்று அவருடைய ரசிகர்களில் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையேயான உண்மையான நட்பும், நம்பியாரின் உண்மையான முகமும் வெளியே தெரிய ஆரம்பித்தது. 

ஒரு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, நம்பியார் கலந்து கொண்டனர். அதில் சிவாஜிக்கு விருது வழங்கி கவுரவித்த எம்.ஜி.ஆர். அவருடைய கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவிப்பார். அடுத்ததாக விருது வாங்க வந்த நம்பியார், எம்.ஜி.ஆரிடம் தனக்கும் முத்தம் வேண்டும் எனக் கேட்பார். எம்.ஜி.ஆரோ செல்லச் சிணுங்கலுடன் அதெல்லாம் முடியாது என்பார். அந்த ஒரு காட்சியே இருவருக்கும் இடையேயான அளப்பரிய நட்பை பறைசாற்றியது.

வில்லன் நடிகருக்குரிய முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆரிடமிருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொண்டார் எனச் சொல்லலாம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தன்னுடைய படத்தில் வில்லன் யார் என்பதை தீவிர யோசனையுடன் முடிவெடுப்பவர் ரஜினி மட்டுமே. நம்பியாருக்கும் ரஜினிக்கும் உள்ள நட்பும் முக்கியமானது. ஆரம்ப காலத்தில் பல ரஜினி படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இளம் நடிகர் என்று எண்ணாமல், தனக்கே உரிய பாணியில் நடித்து ரஜினி படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தவர் நம்பியார்.

நம்பியாரும் ரஜினியும் ஆன்மீக விஷயத்தில் குரு, சிஷ்யர்கள். முன்பு சபரிமலை சென்ற ரஜினி, நம்பியாரை குருசாமியாக ஏற்றுத் தான் சென்று வந்தார். விரதத்தை மீறினால் அபராதம் வசூலிப்பாராம் நம்பியார். அதை சபரிமலை பயணக்குழுவிற்கு செலவிடச் சொல்வாராம். ரஜினியும் நம்பியாரை குரு சாமி என்று மிகுந்த மரியாதையுடன் நடத்தி வந்தார்.

ரஜினி படங்களில் முதலில் வில்லனாக நடித்த நம்பியார் பின்னாளில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். எஜமான் படத்தில் தாத்தாவாக நடித்து அதகளப் படுத்தியிருப்பார் நம்பியார். கடைசியாக நம்பியார் நடித்தது ரஜினியின் பாபா படத்தில்தான். 

மார்ச் 7ம் தேதி நம்பியார் பிறந்த நாள். இந்த ஆண்டு 100வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web