வேப்பம்பூ சூப்….

வயதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்த சர்க்கரை தற்போது 35 ,40 வயதிலேயே வரத் தொடங்கிவிட்டது. மருந்து , மாத்திரைகள் இருந்தாலும் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் சர்க்கரை நோயாளிகள். வீட்டிலேயே சுலபமாக வாரம் ஒரு முறை வேப்பம்பூ சூப் செய்து சாப்பிட்டு வர சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். தேவையான பொருட்கள் : வேப்பம் பூ – 4 டீஸ்பூன் வெண்ணெய் – 4 டீஸ்பூன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப் எலுமிச்சைச்
 

வேப்பம்பூ சூப்….

யதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்த சர்க்கரை தற்போது 35 ,40 வயதிலேயே வரத் தொடங்கிவிட்டது. மருந்து , மாத்திரைகள் இருந்தாலும் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் சர்க்கரை நோயாளிகள். வீட்டிலேயே சுலபமாக வாரம் ஒரு முறை வேப்பம்பூ சூப் செய்து சாப்பிட்டு வர சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.

தேவையான பொருட்கள் :
வேப்பம் பூ – 4 டீஸ்பூன்
வெண்ணெய் – 4 டீஸ்பூன்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
 சிறிது வெண்ணெய் சேர்க்கப்பட்ட  வாணலியில் வேப்பம்பூவைப் போட்டு வறுக்க வேண்டும்.
 வேப்பம் பூ நன்கு வறுபட்ட உடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  கொதி வந்த உடன்  விடவும். ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும்.

இந்தக் கலவையுடன்  காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும் இந்த வேப்பம் பூ சூப்பை  அனைத்து வயதினரும்  வாரம் ஒரு முறை பருகி வரலாம்.

http://www.A1TamilNews.com

From around the web