ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் ரூ.150 மட்டுமே!

கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை, மருந்தகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், உழவர் சந்தைகள் மூலம் சரியான விலைக்கு காய்கறிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் தேனி உழவர் சந்தையில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காய்கறிகள்
 

ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் ரூ.150 மட்டுமே!கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை, மருந்தகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், உழவர் சந்தைகள் மூலம் சரியான விலைக்கு காய்கறிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல் தேனி உழவர் சந்தையில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காய்கறிகள் தொகுப்பு பை 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒருவாரத்திற்கு தேவையான அனைத்து காய்களும் ஒரே தொகுப்பாக கிடைக்கிறது.

இதில் தக்காளி, கத்திரிக்காய்,வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், ப. பட்டாணி, பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெ.வெங்காயம், எலுமிச்சம்பழம், வாழைக்காய், முள்ளங்கி, பச்சை மிளகாய், கீரை உட்பட அனைத்து காய்கறிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web