வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

நடிகர்கள்: சிலம்பரசன், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஒளிப்பதிவு: கோபி அமர்நாத் இசை: ஹிப்ஆப் தமிழா தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ் இயக்கம்: சுந்தர் சி சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான ஒரு படத்தின் தழுவல் இந்த வந்தா ராஜாவாதான் வருவேன். இன்னும் சற்று யோசித்தீர்கள் என்றால், இதே மாதிரி ஒரு கதையை விஷாலை வைத்து ஆம்பள என்ற பெயரில் எடுத்திருந்தார் சுந்தர் சி. அதே கதையை அங்கே இங்கே மாற்றி
 

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்
டிகர்கள்: சிலம்பரசன், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

இசை: ஹிப்ஆப் தமிழா

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: சுந்தர் சி

சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான ஒரு படத்தின் தழுவல் இந்த வந்தா ராஜாவாதான் வருவேன். இன்னும் சற்று யோசித்தீர்கள் என்றால், இதே மாதிரி ஒரு கதையை விஷாலை வைத்து ஆம்பள என்ற பெயரில் எடுத்திருந்தார் சுந்தர் சி. அதே கதையை அங்கே இங்கே மாற்றி இப்போது வராவ என வந்திருக்கிறார்.

ஸ்பெயினில் வசிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நாசர். தன் பேச்சை மீறி ஒரு ஏழை வக்கீலை காதல் திருமணம் செய்ததால் மகள் ரம்யா கிருஷ்ணனைப் பிரிந்து 20 ஆண்டுகளாக வாழ்கிறார். அவருக்கு தன் கடைசி காலத்துக்குள் மகளைப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. அதை தன் பேரன் சிம்புவிடம் சொல்ல, அவரும் இந்தியாவுக்குப் பறந்து வருகிறார். அத்தை ரம்யாவின் வீட்டில் டிரைவராக வேலைக்குச் சேருகிறார். மீதிக் கதை என்னவென்பதை எளிதாக யூகிக்க முடிகிறதல்லவா…!

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்
சிம்புவுக்கு பெரிய வேலை இல்லாத எளிதான வேடம். ஆங்காங்கே எரிச்சலூட்டினாலும் தன் பாணியில் நடித்துத் தள்ளியிருக்கிறார். உடல் எடை, குறிப்பாக தொப்பையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிம்பு. இப்போதே கட்டுக்குள் கொண்டுவருவது நல்லது.

கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் இருவரும் நாயகிகள். கிட்டத்தட்ட சமமான வேடம்தான் என்றாலும், மேகா ஆகாஷ் ரோலுக்கு கொஞ்சம் வெயிட் ஜாஸ்திதான்.

சிம்புவின் அத்தை மாமாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் – பிரபு ஜோடி வழக்கம்போல தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணன் முகத்தில் ரொம்பவே முதுமை தட்டுகிறது.

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

யோகி பாபுதான் பின்பகுதி படத்தைக் காப்பாற்றுகிறார். ஆனால் அந்த அகலிகை நாடகமெல்லாம் செம இழுவை. ரோபோ ஷங்கர் கடுப்பேற்றுகிறார்.

இசை என்ற பெயரில் இம்சிக்கிறார் ஹிப் ஆப் ஆதி. அதிலும் ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய நல்ல பாடல்களையெல்லாம் அவர் குதறுவதைத் தடுக்க யாராவது பொதுநல வழக்குப் போட்டால் நன்றாக இருக்கும்.

ஜீப்பில் விழுந்ததும் பழைய நினைவுகள் மறந்து போவதும், பின்னர் திரும்ப அதே மாதிரி வேறு இடத்தில் விழுந்த பிறகு நினைவு திரும்புவதும்… சாமீ… முடியல… சினிமாக்காரர்களே கைவிட்டுவிட்ட டெக்னிக் இதெல்லாம். இன்னும் சுந்தர் சி விடவில்லை.

சிம்பு, சுந்தர் சி, காசு கொடுத்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் என யாரையுமே காப்பாற்றாத இந்த ராஜா வந்தா என்ன, வராட்டி என்ன என்ற மன நிலையில்தான் தியேட்டரை விட்டு வெளியேறுகிறோம்!

Rating: 1.5/5.0

 

From around the web