30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன்.. மீதி பாஜகவைதான்’!- வைகோ வாக்குமூலம்

சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் 30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன் என்று வைகோ கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற வைகோ, காங்கிரஸை திட்டப் போகிறேன் என்று கூறியதால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் காங்கிரஸ் பற்றி கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, “காங்கிரஸ் கட்சியை 30 சதவீதம் தான் திட்டினேன். 70 சதவீதம் பாஜகவைதான் திட்டிப் பேசினேன்,” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை
 

30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன்.. மீதி பாஜகவைதான்’!- வைகோ வாக்குமூலம்சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் 30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன் என்று வைகோ கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற வைகோ, காங்கிரஸை திட்டப் போகிறேன் என்று கூறியதால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் காங்கிரஸ் பற்றி கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, “காங்கிரஸ் கட்சியை 30 சதவீதம் தான் திட்டினேன். 70 சதவீதம் பாஜகவைதான் திட்டிப் பேசினேன்,” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததால், திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோ பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. வைகோ பேசியது வருத்தம் அளிக்கிறது. அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

கூட்டணிக்கட்சித் தலைவரான திருமாவளவனும் வைகோ பாராளுமன்றத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் நேரடியாக கருத்து தெரிவித்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். சென்னை திரும்புவதற்கு முன், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மூத்த பாஜக தலைவர் அத்வானி, மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வைகோ நேரில் சந்தித்தார்.

வைகோவின் பேச்சால் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணியில் நெருக்கடி ஏற்படலாம் என்று கருதப்பட்டது. 30 சதவீதம்தான் திட்டினேன் என்று வைகோ கூறியுள்ளதால் சமாதானம் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் மதிமுக மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா, அவர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web