காபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க!

தினமும் காலை நம்மில் பலருக்கு காபி அல்லது டீயில் தான் ஆரம்பிக்கும். இதை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் பல வருட பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்வது சிரமமான காரியம். ஆனால் அதில் சுவைக்கு வெள்ளைச் சர்க்கரையை தவிர்க்கலாம். வெள்ளை சர்க்கரை உணவில் சேர்க்கப்படுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்புள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஹீமோகுளோபின் அளவை சீரான முறையில் வைத்திருக்க நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் இரத்தத்தில் தேவையற்ற
 

காபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க!தினமும் காலை நம்மில் பலருக்கு காபி அல்லது டீயில் தான் ஆரம்பிக்கும். இதை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் பல வருட பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்வது சிரமமான காரியம்.

ஆனால் அதில் சுவைக்கு வெள்ளைச் சர்க்கரையை தவிர்க்கலாம். வெள்ளை சர்க்கரை உணவில் சேர்க்கப்படுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்புள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹீமோகுளோபின் அளவை சீரான முறையில் வைத்திருக்க நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் இரத்தத்தில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க முடியும். இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவி புரியும்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயன மூலப்பொருட்கள் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து விடும். நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகி விடும். நாட்டு சர்க்கரை பயன்படுத்த இதைத் தவிர்க்க முடியும்.

A1TamilNews.com

From around the web