தஞ்சாவூர் மாவட்ட ஏரிகள் தூர்வார அமெரிக்க ரஜினி பேரவை உதவி!

இர்விங்: அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் தி க்ரேட் ரஜினி ஃபேன்ஸ் ரசிகர்கள், தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராம ஏரிகள், கால்வாய்களை தூர்வார உதவி செய்துள்ளார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவைச் சேர்ந்த நாடியம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு உள்ள இரு ஏரிகளையும், நீர்வரத்துக்கான கால்வாய்களையும் தூர் வாரும் பணியை கிராம மக்களே செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அந்தப் பணத்தை இந்த
 

தஞ்சாவூர் மாவட்ட ஏரிகள் தூர்வார அமெரிக்க ரஜினி பேரவை உதவி!

இர்விங்: அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும்  தி க்ரேட் ரஜினி ஃபேன்ஸ் ரசிகர்கள், தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராம ஏரிகள், கால்வாய்களை தூர்வார உதவி செய்துள்ளார்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவைச் சேர்ந்த நாடியம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு உள்ள இரு ஏரிகளையும், நீர்வரத்துக்கான கால்வாய்களையும் தூர் வாரும் பணியை கிராம மக்களே செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அந்தப் பணத்தை இந்த  தூர்வாரும் பணிக்காக செலவு செய்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த கிராம மக்களின் தூர் வாரும் பணிக்காக, பண உதவி செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும்  தி க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ அமைப்புகளைச் சார்ந்த ரசிகர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஏரிகள் தூர்வார அமெரிக்க ரஜினி பேரவை உதவி!இரண்டு நாட்களுக்கான தூர்வாரும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது குறித்து அன்புடன் ரவி கூறியதாவது,

“தலைவர் ரஜினியின் பெயரில் தமிழகத்தில் எங்களால் இயன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த குறிப்பிட்ட கிராமத்தில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து ஊர் மக்கள் முழுவதும் இணைந்து தூர் வாரும் தகவல் எங்களை நெகிழ்ச்சியுறச் செய்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இத்தகையப் பணிகளை தமிழகம் முழுவதும் செய்து வரும் நிலையில், நாடியம் கிராம மக்களின் முயற்சிக்கு  உதவ எண்ணினோம்,” என்று கூறினார்.

நாடியம் கிராமத்தில் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்யும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் நீலகண்டன் கூறும் போது,

“எங்கள் கிராம இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிகளுக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாய் பணிகளை முடித்து விட வேலைகளை முடுக்கி விட்டுள்ளோம். அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு பக்கம் உள்ள எங்கள் கிராமத்திற்காக உதவி செய்ய முன் வந்துள்ள அமெரிக்க ரஜினி ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்,” என்று கூறினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஏரிகள் தூர்வார அமெரிக்க ரஜினி பேரவை உதவி!

தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் ரஜினி ரசிகர்களும் தமிழ்நாட்டின் மக்கள் பணிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருவது பாராட்டுக்குரியது.

தொடர்புடைய செய்தி:

‘ஆடல் பாடல் எல்லாம் வேண்டாம்… ஏரியை தூர் வாருவோம்’- அசத்திய தமிழ்நாட்டின் முன் மாதிரி கிராமம்!

From around the web