சாம்சங் நோட் 7 விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை: அமெரிக்க போக்குவரத்துத் துறை அதிரடி!

வாஷிங்டன்(யு.எஸ்): சாம்சங் கேலக்ஸி நோட்7 ஸ்மார்ட்போனை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க போக்குவரத்துத் துறையின் இந்த தடை உத்தரவு அக்டோபர் 15, சனிக்கிழமை நண்பகல் 12 மணி கிழக்கு நேரப்படி அமலுக்கு வருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை விமானத்தின் உள்ளே கையில் உடன் எடுத்துச் செல்லவோ அல்லது லக்கேஜ் பெட்டிகளிலோ அனுமதி இல்லை. மீறி கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள், அமெரிக்காவிலிருந்து
 

சாம்சங் நோட் 7 விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை: அமெரிக்க போக்குவரத்துத் துறை அதிரடி!

வாஷிங்டன்(யு.எஸ்): சாம்சங் கேலக்ஸி நோட்7 ஸ்மார்ட்போனை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க போக்குவரத்துத் துறையின் இந்த தடை உத்தரவு அக்டோபர் 15, சனிக்கிழமை நண்பகல் 12 மணி கிழக்கு நேரப்படி அமலுக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை விமானத்தின் உள்ளே கையில் உடன் எடுத்துச் செல்லவோ அல்லது லக்கேஜ் பெட்டிகளிலோ அனுமதி இல்லை. மீறி கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்.

வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள், அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்கள் மற்றும் உள் நாட்டு சேவை விமானங்கள் என அனைத்து விமான சேவைகளுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரக்கு பெட்டிகளில் சாம்சங் கேலக்ஸி நோட்7 ஸ்மார்ட்போன்களை விமானத்தில்
அனுப்பவதற்கும் இந்த தடை உண்டு, திடீரென்று தீப்படித்துக் கொள்வதால் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிக்கை தெரிவிக்கிறது.

சாம்சங் நிறுவனம் 25 லட்சம் நோட்7 ஸ்மார்ட்போன்களை இதுவரையிலும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க அரசின் இந்த தடை உத்தரவு சாம்சங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 ஸ்மார்ட் போன் தடை உத்தரவை அமல்படுத்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு சோதனைத் துறையினருக்கும் கடும் சவாலாக இருக்கும்.

அதனால்தான் என்னவோஅபராதம் விதித்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவுக்கு செல்பவர்கள், அமெரிக்காவுக்குள் பயணம் செய்பவர்கள் சாம்சங் கேலக்ஸி நோட்7 ஐ மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுங்க. அபராதம் மட்டுமல்ல, பாதுகாப்பு சோதனையிலும் உங்கள் பெயர் நிரந்தரமாக பதிவு செய்யப்பட வாய்ப்பும் உள்ளது.

சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, அதன் வாடிக்கையாளர்களுக்கும் வந்த சோதனையை என்னவென்று சொல்வது?

The Transportation Department is issuing an emergency order banning passengers and flight crews from bringing Samsung Galaxy Note7 smartphones on airline flights, in response to reports of the phones catching fire.

From around the web