இந்தியாவிலிருந்து அமெரிக்க சிறப்பு மீட்பு விமானங்கள் ரத்து!

இந்தியாவிலிருந்து அமெரிக்க குடிமக்களையும் க்ரீன்கார்டுகாரர்களையும் அழைத்து வருவதற்காக டெல்லி, மும்பை நகரங்களிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு மீட்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆன்லைன் மூலம், அமெரிக்காவுக்கு திரும்பி வர விரும்புகிறவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ, அட்லாண்டா நகரங்களுக்கு விமான சேவை வழங்கினார்கள். இது வரையிலும் 5 ஆயிரத்து 500 அமெரிக்க குடிமக்கள் மற்றும் க்ரீன்கார்டுகாரர்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் திரும்ப
 

இந்தியாவிலிருந்து அமெரிக்க சிறப்பு மீட்பு விமானங்கள் ரத்து!ந்தியாவிலிருந்து அமெரிக்க குடிமக்களையும் க்ரீன்கார்டுகாரர்களையும் அழைத்து வருவதற்காக டெல்லி, மும்பை நகரங்களிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு மீட்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆன்லைன் மூலம், அமெரிக்காவுக்கு திரும்பி வர விரும்புகிறவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ, அட்லாண்டா நகரங்களுக்கு விமான சேவை வழங்கினார்கள்.

இது வரையிலும் 5 ஆயிரத்து 500 அமெரிக்க குடிமக்கள் மற்றும் க்ரீன்கார்டுகாரர்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் திரும்ப அழைத்து வந்துள்ளனர். தற்போது அமெரிக்கா செல்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து விட்டதால், அமெரிக்க அரசு தரப்பிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் அமெரிக்கா வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. விசா, க்ரீன்கார்டு, அமெரிக்க குடிமக்கள் உள்பட அமெரிக்காவுக்கு வர அனுமதி உள்ள அனைவரும் இந்த ஏர் இந்தியா சிறப்பு விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தகரீதியான விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. இரண்டாம் கட்டமாக ஏர் இந்தியா விமானத்தின் 7 சிறப்பு சேவைகளின் கடைசி விமானம், டெல்லியிலிருந்து மே 28ம் தேதி அதிகாலை 2: 20 மணிக்கு புறப்பட்டு சிகாகோ வர இருக்கிறது. மே 31ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு சிகாகோவிலிருந்து டெல்லி செல்லும்.

A1TamilNews.com

From around the web