மீண்டும் வருவேன்… தாஜ்மஹால் அழகில் வியந்து போன அதிபர் ட்ரம்ப்!

இந்தியாவுக்கு அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாஜ்மஹாலின் அழகைப் பார்த்து வியந்து போயுள்ளார். மீண்டும் வர விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதிபர் ட்ரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மகன் ஜெரட் குஷ்னர் ஆகியோருடன் தாஜ்மஹாலுக்கு வருகை தந்தார். அங்குள்ள வேலைப்பாடுகளையும் தாஜ்மஹாலின் அழகையும் கண்டு ரசித்தார். விதவிதமாக போஸ்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டார். பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப், “தாஜ்மஹால் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. தாஜ்மஹால் இந்தியாவின் வளமிக்க
 

மீண்டும் வருவேன்… தாஜ்மஹால் அழகில் வியந்து போன அதிபர் ட்ரம்ப்!ந்தியாவுக்கு அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாஜ்மஹாலின் அழகைப் பார்த்து வியந்து போயுள்ளார். மீண்டும் வர விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மகன் ஜெரட் குஷ்னர் ஆகியோருடன் தாஜ்மஹாலுக்கு வருகை தந்தார். அங்குள்ள வேலைப்பாடுகளையும் தாஜ்மஹாலின் அழகையும் கண்டு ரசித்தார். விதவிதமாக போஸ்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டார். 

பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப், “தாஜ்மஹால் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. தாஜ்மஹால் இந்தியாவின் வளமிக்க பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும், காலத்தால் அளவிடமுடியாத மிகப்பெரும் சொத்தாகும்,: என்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்திய அரசின் சுற்றுலாத்துறை கைடாக நியமிக்கப்பட்டுள்ள நித்தின் குமார் சிங், அதிபர் ட்ரம்புக்கு தாஜ்மஹால் பற்றிய வரலாற்றையும் மன்னர் ஷாஜகான் மனைவி மும்தாஜ் மீது கொண்டிருந்த காதலையும் விவரித்துக் கூறினார். ட்ரம்பும், மெலானியாவும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். மீண்டும் தாஜ்மஹாலுக்கு வர விரும்புதாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.A1TamilNews.com

From around the web