குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லீம்களை பாதிக்கும்…அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு!

அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக் குழு (Congress Research Services) தயாரித்துள்ள அறிக்கையில் , இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச் செயலாளர்(பொறுப்பு) அலிஸ் வெல்ஸ் இந்த சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயல் படுவதிலிருந்து விலகிச் செல்லுமோ என்ற உண்மையான கவலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காந்தி, நேருவின் மதசார்பற்ற
 

குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லீம்களை பாதிக்கும்…அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு!மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக் குழு (Congress Research Services) தயாரித்துள்ள அறிக்கையில் , இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச் செயலாளர்(பொறுப்பு) அலிஸ் வெல்ஸ் இந்த சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயல் படுவதிலிருந்து விலகிச் செல்லுமோ என்ற உண்மையான கவலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காந்தி, நேருவின் மதசார்பற்ற இந்தியாவை இந்து தேசியவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு நிலவரங்களை தெரியப்படுத்தும் வகையில் இத்தகைய அறிக்கைகளை பாராளுமன்ற ஆய்வுக்குழு தயாரித்து வழங்குகிறது.

அமெரிக்காவும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை சந்தேகப் பார்வையில் பார்க்கத் தொடங்கியுள்ளது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

A1TamilNews.com

From around the web