விசா விதிமுறை மீறல்.. அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம்!

விசா விதிமுறைகளை மீறியது, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது போன்ற காரணங்களுக்காக 150 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டவர்கள், பங்களாதேஷ் வழியாக டெல்லி விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பஞ்சாபிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விசா விதிமுறைகளை மீறியவர்கள், மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்கள் என காரணங்கள் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக 311 பேர் மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு
 

விசா விதிமுறை மீறல்.. அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம்!விசா விதிமுறைகளை மீறியது, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது போன்ற காரணங்களுக்காக  150 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டவர்கள், பங்களாதேஷ் வழியாக டெல்லி விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பஞ்சாபிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் விசா விதிமுறைகளை மீறியவர்கள், மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்கள் என காரணங்கள் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக 311 பேர் மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.

சுமார் 7000 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்காக அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க சிறைகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

சமீப காலத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது இதுவே ஆகும்.

A1TamilNews.com

From around the web