வாயையும் மூக்கையும் மூடிட்டு போகல்லனா 1000 டாலர்கள் அபராதம் – அமெரிக்காவிலே தான்!

கொரோனா வைரஸிஸ் உறைவிடமாகப் போகிவிட்ட அமெரிக்காவில் வெளியே செல்லும் போது மூக்கையும் வாயையும் மூடிச் செல்லவில்லை என்றால் ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு நகரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க்குகள், கையுறைகள், கவுன்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பொது மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டுமா என்று விவாதம் எழுந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் ஒருவராக செயல்பட்டு வரும் டாக்டர்.டெபரா பர்க், மாஸ்க்
 

வாயையும் மூக்கையும் மூடிட்டு போகல்லனா 1000 டாலர்கள் அபராதம் – அமெரிக்காவிலே தான்!கொரோனா வைரஸிஸ் உறைவிடமாகப் போகிவிட்ட அமெரிக்காவில் வெளியே செல்லும் போது மூக்கையும் வாயையும் மூடிச் செல்லவில்லை என்றால் ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு நகரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க்குகள், கையுறைகள், கவுன்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பொது மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டுமா என்று விவாதம் எழுந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் ஒருவராக செயல்பட்டு வரும் டாக்டர்.டெபரா பர்க்,  மாஸ்க் போட்டுச் செல்வதால் கொரோனா பாதிக்கப்பட்டவரிடமிருந்து இருமல், தும்மல் மூலம் வைரஸ் மற்றவர்கள் மீது படாமல் தடுக்கலாம். ஆனால் இது மட்டுமே கொரோனா பரவலை தடுத்து விடாது. எனவே இது குறித்து தீர ஆராயவேண்டும். மேலும் மருத்துவப் பணியாளர்களுக்கே மாஸ்குகள் தட்டுப்பாடு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், அதிபர் ட்ரம்ப் விருப்பப்படுவர்கள் மாஸ்க் அணிந்து செல்லலாம் அல்லது கையில் இருக்கும் ஸ்கார்ப்-ஐக் கூட முகத்தில் கட்டிக் கொள்ளலாம். நல்ல துணியில் செய்யப்பட்ட ஸ்கார்ப்- மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார். அதிபரின் இந்தக் கருத்தை பலரும் விமரிசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் லரெடியோ நகரில் வெளியே செல்லும் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் செல்லும் போது, பொதுமக்கள் போக்குவரத்தை பயன்படுத்தும் போது, கூட்டமான இடங்களில் செல்லும் போது, பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்பும் போது மூக்கையும், வாயையும் மாஸ்க் போன்றவற்றைக் கொண்டுமூடிக்கொண்டு செல்ல வேண்டும். 

தனியாக சைக்கிளில் யாருமில்லாத இடங்களில் சென்றாலோ, தனியாக குடும்பத்தோடு கூடியிருக்கும் போது, சொந்த வீட்டில்  இருக்கும் போதோ இந்தக் கட்டுப்பாடு கிடையாது. 

மேலும் இரவு 10 மணி முதல்  காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்ப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு நேரத்தில் வேலைக்குச் செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் கேட்கும் போது உரிய அடையாள அட்டை, வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் காட்ட வேண்டும்.

இந்த உத்தரவுகளை மீறுபவர்களுக்கு ஆயிரம் டாலர் அபராதம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சான் அண்டோனியோவுக்கு தென் மேற்கே, சுமார் 150 மைல்கள் தொலைவில் மெக்சிகோ நாட்டின் எல்லையில் லரெடியோ நகரம் அமைந்துள்ளது.

A1TamilNews.com

From around the web