ஏப்ரல் 1 வரை ஆன்லைனில் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு! விசாவில் இருப்பவர்களுக்குமா?

அமெரிக்க அரசியல் சாசனச் சட்டப்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்யக் கோரி ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் தபால் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரின் வீட்டிற்கும் தற்போது இந்த தபால் வந்திருக்க வேண்டும். அதில் ஒரு குறிப்பிட்ட குறியீடு எண்ணும், ஆன்லைன் இணையத்தள முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும். my2020census.gov இணையத்தளத்திற்கு சென்று குறியீட்டு எண்ணை
 

ஏப்ரல் 1 வரை ஆன்லைனில் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு! விசாவில் இருப்பவர்களுக்குமா?மெரிக்க அரசியல் சாசனச் சட்டப்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.

2020ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்யக் கோரி ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் தபால் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரின் வீட்டிற்கும் தற்போது இந்த தபால் வந்திருக்க வேண்டும். அதில் ஒரு குறிப்பிட்ட குறியீடு எண்ணும், ஆன்லைன் இணையத்தள முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.

my2020census.gov இணையத்தளத்திற்கு சென்று குறியீட்டு எண்ணை பதிவு செய்தால், சென்சஸ் விவரங்களை பதிவு செய்ய அனுமதிக்கும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மறு ஒதுக்கீடு மற்றும் தொகுதி எல்லைகள் மறு வரையறை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு மாநில, கவுண்டி, நகரத்திற்கு தேவையான  கல்வி, சுகாதாரம் உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 675 பில்லியன் டாலர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசால், மக்கள் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் தொகை எண்ணிக்கை முழுமையாக கணக்கிடப்பட வேண்டும் என்று நகர நிர்வாகமும், அங்கே வசிக்கும் மக்களை இந்த கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு ஊடகங்கள், இணைய தளம் என பல்வேறு வழிகளில் நினைவூட்டுகிறார்கள். 

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஹெச்1, எல் 1 விசாவில் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுடன் ஹெச்4, எல் 4 விசாவில் இருப்பவர்கள் பங்கேற்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்விகளில் குடியுரிமை பற்றிய கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதில்லை. ஏப்ரல் 1ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு, அன்றைய தேதியில் குறிப்பிட்ட முகவரியில் இருப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அந்த முகவரியில் வசிப்பவர்களுடைய பெயர், பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. 

ஏப்ரல் 1 வரை ஆன்லைனில் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு! விசாவில் இருப்பவர்களுக்குமா?

இனம்  (Race) தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பொருத்தமான ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டதை குறிப்பிடச் சொல்கிறார்கள். அமெரிக்க குடிமகனா? க்ரீன்கார்டு வைத்திருப்பவரா, விசாவில் இருப்பவரா என்ற கேள்விகள் இடம்பெறவில்லை. மேலும் யாரெல்லாம் கணக்கிடப்பட வேண்டும் என்ற விவரத்தையும் 2020census.gov/en/who-to-count.html  இணைப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் தூதுரக அதிகாரிகள் உள்ளிட்ட வெளிநாட்டு குடிமகன்கள், இந்த கணக்கெடுப்பின் போது எந்த முகவரியில் வசிக்கிறார்களோ, அதிக நாட்கள் தங்குகிறார்களோ அந்த முகவரியில் கணக்கிடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி தற்காலிகமாக சுற்றுலா அல்லது தொழில் நிமித்தமாக வருகை தரும் வெளிநாட்டு குடிமகன்கள் இந்த கணக்கெடுப்பில் கணக்கிடப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 2020census.gov/en/help.html பக்கத்தில் கூடுதல் கேள்வி-பதில் தகவல்கள் உள்ளது. 1-844-330-2020 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்கள், விளக்கங்கள்கேட்கலாம்

ஆக, க்ரீன்கார்டு, ஹெச்1 விசா, எல்1 விசாவில் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் அனைவரும் கட்டாயம் இந்த மக்கள் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A1TamilNews.com

From around the web