‘டெல்லிக்கு மன்மோகன் சிங்.. நாங்குனேரிக்கு உதயநிதி ஸ்டாலின்’ – திமுக கூட்டணிக் கணக்கு?

சென்னை: மாநிலங்களவைக்கான 6 இடங்களில் 3 திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் மதிமுகவின் வைகோவுக்கு உறுதியளிக்கப்பட்டது போக, இரண்டு எம்.பி.க்கள் திமுகவிடம் இருக்கிறது. அதில் ஒன்று இளைஞரணிச் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது. காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று டாக்டர்.மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டிலிருந்து மேலவை எம்.பி. ஆக்க மு.க.ஸ்டாலின் மனதளவில் ஒப்புக் கொண்டுள்ளாராம். அதுக்கு ஈடாக இடைத் தேர்தல் நடக்க உள்ள நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியை விட்டுத் தருமாறு திமுக தரப்பில் கோரிக்கை
 

சென்னை: மாநிலங்களவைக்கான 6 இடங்களில் 3 திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் மதிமுகவின் வைகோவுக்கு உறுதியளிக்கப்பட்டது போக, இரண்டு எம்.பி.க்கள் திமுகவிடம் இருக்கிறது. அதில் ஒன்று இளைஞரணிச் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று டாக்டர்.மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டிலிருந்து மேலவை எம்.பி. ஆக்க மு.க.ஸ்டாலின் மனதளவில் ஒப்புக் கொண்டுள்ளாராம். அதுக்கு ஈடாக இடைத் தேர்தல் நடக்க உள்ள நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியை விட்டுத் தருமாறு  திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாம்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு மற்றும் கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில் மைக்கைப் பிடித்த உதயநிதி, அங்கே அமர்ந்திருந்த திருநாவுக்கரசருக்கு மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.

நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு தந்து விடுங்கள். நாங்கள் எப்படியும் வென்று விடுவோம் என்று நேரடியாகவே கேட்டார் உதயநிதி. தன் தந்தை மு.க.ஸ்டாலின் இளகிய மனம் கொண்டவர் என்றும் குறிப்பிட்ட உதயநிதி, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு வேட்டு வைப்பதாக நினைக்க வேண்டாம் என்றும் பேசியுள்ளார்.

நாங்குனேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினே போட்டியிடக்கூடும் என்ற பேச்சு இப்போது அடிபடுகிறது. மேடையிலே வெளிப்படையாகக் கேட்டு விட்டதால், உதயநிதி போட்டியிட்டால் விட்டுக் கொடுக்கலாம் என்ற ரீதியில் காங்கிரஸ் தரப்பில் எண்ணுகிறார்களாம். 

காங்கிரஸ் விவிஐபி மன்மோகன் சிங்குக்கு திமுக உதவுது போல், திமுகவின் அடுத்த தலைமுறை விஐபி-க்கு காங்கிரஸ் உதவுதாக சரிக்கு சரி சமம் ஆகிவிடும் என்ற கணக்காம் அது.

ஆக, டாக்டர். மன்மோகன் சிங் விரைவிலேயே ‘தமிழ் வாழ்க’ என்று சொல்லக்கூடிய சூழல் உருவாகலாம். நாங்குனேரியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்பதே காங்கிரஸ், திமுக வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

– வணக்கம் இந்தியா

From around the web