சாத்தான்குளம் போன உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்கினாரா? இல்லையா?

சாத்தான்குளம் சம்பவத்தில் கொலையாளிகளை தப்ப வைக்க அரசு திட்டமிடுவதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். அதே குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலினும் முன் வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்காமல் சாத்தான்குளம் சென்று வந்ததாகப் பேசி விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். “‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம்
 

சாத்தான்குளம் போன உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்கினாரா? இல்லையா?சாத்தான்குளம் சம்பவத்தில் கொலையாளிகளை தப்ப வைக்க அரசு திட்டமிடுவதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். அதே குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலினும் முன் வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்காமல் சாத்தான்குளம் சென்று வந்ததாகப் பேசி விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

“‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது,” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இ-பாஸ் வாங்கி விட்டுத்தான் சாத்தான்குளம் போனதாகவும், அனைத்து செக்போஸ்டுகளிலும் போலீசாருக்கு காட்டியதாகவும் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். இ-பாஸ் ஆவணங்கள் அரசு இணையத்தளத்தில் இருக்குமே. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்க வில்லை என்றால் அதிகாரப் பூர்வமாகவே அரசு தரப்பில் இது குறித்து அறிக்கை வெளியிடலாம் தானே!

A1TamilNews.com

From around the web