அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு கடிவாளம் போடுகிறதா ட்விட்டர் நிறுவனம்?

அமெரிக்க அதிபர்களில் ட்விட்டர் மூலம் தினசரி கருத்துகளை பகிர்ந்து வருவதில் முதலிடத்தைப் பிடித்தவர் அதிபர் ட்ரம்ப். சமூகத்தளத்தின் துணையோடு தான் ஆட்சியில் அமர்ந்தவர் என்றாலும், அதிபர் ஒபாமா ட்விட்டர் தளத்தை அளவோடு தான் பயன்படுத்தினார். உலக அரசியலையும் அன்னிய நாட்டு உறவுகளையும் கூட ட்விட்டர் மூலம் தெரியப்படுத்து, அளவுக்கு ட்விட்டர்வாசி அதிபர் ட்ரம்ப். அவருடைய ட்வீட்கள் அவ்வப்போது பெரும் பரப்பரப்பையும் சில சமயங்களில் சர்ச்சையையும் கிளப்பி வருவதும் வாடிக்கையானதே. இந்நிலையில் முதன் முதலாக அதிபர் ட்ரம்ப்பின் ட்வீட்
 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு கடிவாளம் போடுகிறதா ட்விட்டர் நிறுவனம்?மெரிக்க அதிபர்களில் ட்விட்டர் மூலம் தினசரி கருத்துகளை பகிர்ந்து வருவதில் முதலிடத்தைப் பிடித்தவர் அதிபர் ட்ரம்ப்.

சமூகத்தளத்தின் துணையோடு தான் ஆட்சியில் அமர்ந்தவர் என்றாலும், அதிபர் ஒபாமா ட்விட்டர் தளத்தை அளவோடு தான் பயன்படுத்தினார். உலக அரசியலையும் அன்னிய நாட்டு உறவுகளையும் கூட ட்விட்டர் மூலம் தெரியப்படுத்து, அளவுக்கு ட்விட்டர்வாசி அதிபர் ட்ரம்ப்.

அவருடைய ட்வீட்கள் அவ்வப்போது பெரும் பரப்பரப்பையும் சில சமயங்களில் சர்ச்சையையும் கிளப்பி வருவதும் வாடிக்கையானதே. இந்நிலையில் முதன் முதலாக அதிபர் ட்ரம்ப்பின் ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தபால் மூலம் வாக்களிப்பது பெருமளவில் வாக்குப்பதிவு முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என்று அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பதற்குத் தான் ட்விட்டர் நிறுவனம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பது தொடர்பான வழிமுறைகள் பற்றி குழப்பம் ஏற்படுவதாக இருப்பதால், தபால் வாக்குகள் பற்றிய விவரங்களை பாருங்கள் என்று ட்ரம்ப்பின் இரண்டு ட்வீட்களில்  குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு கடிவாளம் போடுகிறதா ட்விட்டர் நிறுவனம்?அமெரிக்க அதிபரே ஆனாலும், சொல்லும் தகவல்கள் சரியில்லை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம் என்று முன்வந்துள்ளது ட்விட்டர் நிர்வாகம். அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நீட்டுகிறது என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு குட்டு வைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

ரஜினிகாந்தின் கொரோனா பற்றிய ட்வீட் நீக்கப்பட்டபோது, திமுகவினரின் சதி என்று ரஜினி ரசிகர்கள் கொந்ததளித்தது நினைவிருக்கலாம். அப்போ. ட்விட்டர் காரங்க எப்போதுமே உண்மையின் பக்கம் தான் நிற்கிறார்களா என்ன?

A1TamilNews.com

From around the web