கருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது! அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்!

அமெரிக்காவில் மே 25ம் தேதி விசாரணையின் போது கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலவரத்தையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டக்காரர்கள் மீட்து நாய்களை ஏவி விடுங்கள் என டிரம்ப் கூறியது உலகம் முழுவதும் பலத்த சர்ச்சைக்குள்ளானது. இந்த கலவரங்களையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் வெள்ளைமாளிகையைச் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பி வந்த
 

கருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின்  கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது! அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்!மெரிக்காவில் மே 25ம் தேதி விசாரணையின் போது கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலவரத்தையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

போராட்டக்காரர்கள் மீட்து நாய்களை ஏவி விடுங்கள் என டிரம்ப் கூறியது உலகம் முழுவதும் பலத்த சர்ச்சைக்குள்ளானது. இந்த கலவரங்களையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் வெள்ளைமாளிகையைச் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் வரலாற்றிலேயே முதன் முறையாக வெள்ளை மாளிகைப் பகுதியில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக பதுங்கு குழிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை எனில் சுடப்படுவீர்கள் என அதிபர் டிரம்ப் டிவீட் செய்தார். இதையடுத்து டிவிட்டர் நிர்வாகம் ட்வீட்டை ப்ரமோட் செய்ய மறுத்து விட்டது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முகப்புப் புகைப்படத்தை கருப்பு நிறமாக மாற்றியுள்ளது.

டிரம்ப்பின் கணக்கு தொடரும் என்றாலும் கருப்பினத்தவர்களுக்கு எதிரான அவரது கருத்துக்களை ப்ரமோட் செய்யமுடியாது என ஸ்நாப் சாட் அறிவித்துள்ளது. ஸ்நாப்சாட்டில் 22கோடி பேர் பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web