பொருளாதாரத் திட்டங்களுடன் தென் அமெரிக்கா போகிறார் ட்ரம்ப்.. சீனாவுக்கு செக்?

வாஷிங்டன்: பெருவில் நடைபெற உள்ள அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மாநாட்டில் பங்கேற்ற கையோடு பெரு, போகோடா, கொலம்பியா நாடுகளில் சுற்றுப் பயணமும் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் அதிபர்களைச் சந்தித்து பொருளாதாரத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். மெக்சிகோவுக்கு கீழே மத்திய அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான பொருளாதார வர்த்தக தொடர்புகள் கொண்டவை. தென் அமெரிக்காவில் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு ப்ரேசில் மட்டுமே. பெட்ரோலியப் பொருட்களில் விலை
 

பொருளாதாரத் திட்டங்களுடன் தென் அமெரிக்கா போகிறார் ட்ரம்ப்..  சீனாவுக்கு செக்?

வாஷிங்டன்: பெருவில் நடைபெற உள்ள அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மாநாட்டில் பங்கேற்ற கையோடு பெரு, போகோடா, கொலம்பியா நாடுகளில் சுற்றுப் பயணமும் மேற்கொள்கிறார்.

அந்த நாடுகளின் அதிபர்களைச் சந்தித்து பொருளாதாரத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். மெக்சிகோவுக்கு கீழே மத்திய அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான பொருளாதார வர்த்தக தொடர்புகள் கொண்டவை.

தென் அமெரிக்காவில் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு ப்ரேசில் மட்டுமே. பெட்ரோலியப் பொருட்களில் விலை இருக்கும் வரையில் வெனிசூலாவும் உச்சத்தில் இருந்தது. தற்போது அங்கே பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டு கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தென் அமெரிக்காவில் ஆதிக்கத்தை விரிவாக்கும் முயற்சியாக ட்ரம்ப் பயணம் கருதப்படுகிறது. அடிப்படையில் பிசினஸ்மேன் ஆன ட்ரம்ப்-க்கு வர்த்தகம் தொடர்பான சந்திப்பு என்றால் மனிதர் குஷி ஆகி விடுகிறார். தென் அமெரிக்க நாடுகளில் இதுவரை அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தாத நிலையில், ட்ரம்பின் பயணம் உறவுகளை மேம்படுத்தி புதிய அத்தியாத்தை தொடங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தென் அமெரிக்காவில் கால் ஊன்ற முயன்று வரும் சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதுவும் ட்ரம்ப்-ன் திட்டம் என்று கருதப்படுகிறது.

 

From around the web