ட்ரம்ப் போட்ட ஒரு ட்வீட் … கச்சா எண்ணெய் விலை சட்டென்று குறைந்தது?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட் மூலம், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் போல்டன் -ஐ அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக ட்ரம்ப்பின் ட்வீட்-ஐ த்தான் இப்படிச் சொல்கிறார்கள். ஜான் போல்டன் பதவி நீக்கத்திற்கும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கும் என்ன காரணம்? அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எழுந்த விரிசல்களுக்கு போல்டன் தான் காரணம் என்று கருதப்படுகிறது. போல்டனின் தீவிர ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டினால் தான்
 

ட்ரம்ப் போட்ட ஒரு ட்வீட் … கச்சா எண்ணெய் விலை சட்டென்று குறைந்தது?வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட் மூலம், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் போல்டன் -ஐ அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக ட்ரம்ப்பின் ட்வீட்-ஐ த்தான் இப்படிச் சொல்கிறார்கள்.

ஜான் போல்டன் பதவி நீக்கத்திற்கும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கும் என்ன காரணம்? அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எழுந்த விரிசல்களுக்கு போல்டன் தான் காரணம் என்று கருதப்படுகிறது. போல்டனின் தீவிர ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டினால் தான் ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

போல்டன் தற்போது பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் அமெரிக்கா – ஈரான் இடையேயான பதட்டம் குறையும், ஈரான் மீதான தடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற காரணத்தினால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

போல்டனை பதவியிலிருந்து  ட்ரம்ப் நீக்கிய சற்று நேரத்திலேயே, கச்சா எண்ணெய் விலை 2.2 சதவீதம் குறைந்திருக்கிறது.  பேரல் ஒன்றுக்கு 57 டாலர்கள் 75 சென்ட்கள் என்று இருந்தது 57 டாலர்கள் 30 சென்ட்களாக குறைந்துள்ளது.

ஆனால் ஈரான் விவகாரத்திற்காக போல்டனின் பதவி பறிபோகவில்லை, ட்ரம்புடன் ரகசியமாக தலிபான் தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த விவகாரத்திற்காகத் தான் அவரை ட்ரம்ப் நீக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஒரு அமெரிக்க ராணுவ வீரர் உட்பட் 13 பேர் தலிபான் தாக்குதலால் கொல்லப்பட்டனர். அதன் பிறகே அந்த சந்திப்பு பற்றியும், அதை ரத்து செய்து விட்டதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

பின்னணி எதுவானாலும், ஆனால் ஒரு ட்வீட் மூலம் கச்சா எண்ணெய் விலையை குறைத்து விட்டார் ட்ரம்ப் என்றாகி விட்டது.

 

From around the web