இரண்டாவது சோதனையிலும் அதிபர் ட்ரம்ப்-க்கு கொரோனோ இல்லை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டார். அதிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளிவந்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா சோதனைக்கு முடிவு தெரிய 2 முதல் 7 நாட்கள் வரை ஆகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 நிமிடத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளும் புதிய முறைக்கு அமெரிக்க உணவு மற்று மருத்துவத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த முறைப்படி அதிபர் ட்ரம்ப், சோதனை மேற்கொண்டுள்ளார். முக்கியமாக இது எப்படி
 

இரண்டாவது சோதனையிலும் அதிபர் ட்ரம்ப்-க்கு கொரோனோ இல்லை!மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டார். அதிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளிவந்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா சோதனைக்கு முடிவு தெரிய 2 முதல் 7 நாட்கள் வரை ஆகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 நிமிடத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளும் புதிய முறைக்கு அமெரிக்க உணவு மற்று மருத்துவத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்த முறைப்படி அதிபர் ட்ரம்ப், சோதனை மேற்கொண்டுள்ளார். முக்கியமாக இது எப்படி செயல்படுகிறது என்பதற்காகவே ஆர்வத்துடன் இந்த சோதனையை செய்து பார்த்தேன். மிகவும் எளிமையான சோதனை, 15 நிமிடத்தில் சோதனையின் முடிவு வந்து விட்டது. இதோ, இதிலும் நெகட்டிவ் என்று வந்துள்ளது என்று சோதனை முடிவு பிரிண்ட் செய்யப்பட்ட படிவத்தை செய்தியாளர்களிடம் காட்டினார் ட்ரம்ப்.

முன்னதாக அதிபர் ட்ரம்ப் கொரோனா சோதனை செய்து கொண்டார். அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்றே முடிவு வந்தது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார் என்பtது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web