ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்! கெட்டவார்த்தைகளை கொட்டியதால் விபரீதம்!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியினரை ட்ரம்ப் கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக களம் இறங்க இருக்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனை விசாரிக்க உக்ரைன் அரசை வலியுறுத்தியதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க அரசியலை உலுக்கி வரும் இந்த
 

ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்! கெட்டவார்த்தைகளை கொட்டியதால் விபரீதம்!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியினரை ட்ரம்ப் கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக களம் இறங்க இருக்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனை விசாரிக்க உக்ரைன் அரசை வலியுறுத்தியதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க அரசியலை உலுக்கி வரும் இந்த விவகாரத்தை விசாரிக்கவுள்ளதாக சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாட்டிற்கு துரோகம் இழைத்தல், லஞ்சம், சட்டமீறல் மற்றும் மிகப்பெரிய அளவிலான குற்றங்கள் செய்தால் இம்பீச்மெண்ட் எனப்படும் பதவிநீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை அதிபராக பதவிவகித்த யாரும் இதுபோன்று பதவியில் இருந்து நீக்கப்பட்டதில்லை. இந்நிலையில் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியினரை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்னை பழிவாங்கும் செயல் என கூறிய ட்ரம்ப், அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவரையும் ஊழல் பேர்வழிகள் என்று சாடினார். மேலும் இந்த விசாரணையின் புலனாய்வு குழுத் தலைவர் ஆடம் ஸ்கிஃப் – ஐ கீழ்த்தனமானவர் என்றும், அவமதிப்பு நடத்தைக்காக அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்தவரின் வார்த்தைகளை ஏற்று ஸ்கிஃப் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை குப்பை என விமர்சித்திருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

From around the web