அமெரிக்காவில் உயிரிழப்பு 1 லட்சத்தை எட்டும் – அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வாக்குமூலம்!

கொரோனாவினால் அமெரிக்காவில் 1 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக சி.என்.என் தொலைக்காட்சியின் ஸ்டேட் ஆஃப் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொற்று நோய் வல்லுனர் அண்டனி ஃபௌச்சி, தற்போது நோய் தொற்று பரவும் விகிதாச்சாரத்தை கணக்கிட்டால் அமெரிக்காவில் 1 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று கூறியிருந்தார். 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கணக்கிட்டுச் சொல்லியிருந்தார். ஞாயிற்றுக் கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய
 

அமெரிக்காவில் உயிரிழப்பு 1 லட்சத்தை எட்டும் – அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வாக்குமூலம்!கொரோனாவினால் அமெரிக்காவில் 1 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

முன்னதாக சி.என்.என் தொலைக்காட்சியின் ஸ்டேட் ஆஃப் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொற்று நோய் வல்லுனர் அண்டனி ஃபௌச்சி,  தற்போது நோய் தொற்று பரவும் விகிதாச்சாரத்தை கணக்கிட்டால் அமெரிக்காவில் 1 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று கூறியிருந்தார். 20  லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கணக்கிட்டுச் சொல்லியிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், உயிரிழப்புகளை ஒரு லட்சத்திற்கும் குறைவாக தடுத்து விட்டோம் என்றால் நாம் அனைவரும் சரியான முறையில் வேலை பார்த்துள்ளோம் என்று அர்த்தமாகும். இன்று தான் எனக்கும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று தெரியவந்தது. 22 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சொன்னார்கள். இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள். 

ஏப்ரல் மாதம் முழுவதும் “Social Distancing – விலகியிருத்தல்” கடைப்பிடிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தி 42 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு  2 ஆயிரத்து 484 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 559 ஆகவும் உள்ளது.

A1TamilNews.com

 

From around the web