அதிபர் ட்ரம்ப்க்கு ஈரான் மீது இரக்கமா? தளர்கிறது தடைகள்?

வாஷிங்டன்: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அதிபர் ட்ரம்ப் தயாராகி விட்டார் என்று தெரிகிறது. ஜி7 மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் முன்வைத்த யோசனையை பரிசீலிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்டும் வகையில் அமெரிக்காவிடம், பெட்ரோலுக்கு இணைத் தொகையாக, 5 பில்லியன் டாலர்கள் ஈரான் கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்று மேக்ரன் பரிந்துரைத்து இருந்தார். அதற்கு கைமாறாக, ஒபாமா கையெழுத்திட்ட அணு ஆயுதத் தடை
 

அதிபர் ட்ரம்ப்க்கு ஈரான் மீது இரக்கமா? தளர்கிறது தடைகள்?

வாஷிங்டன்: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அதிபர் ட்ரம்ப் தயாராகி விட்டார் என்று தெரிகிறது. ஜி7 மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் முன்வைத்த யோசனையை பரிசீலிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்டும் வகையில் அமெரிக்காவிடம்,  பெட்ரோலுக்கு இணைத் தொகையாக, 5 பில்லியன் டாலர்கள்  ஈரான் கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்று மேக்ரன் பரிந்துரைத்து இருந்தார்.

அதற்கு கைமாறாக,  ஒபாமா கையெழுத்திட்ட அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் மீண்டும் வர வேண்டும். பெர்சியன் வளைகுடாப் பகுதியில் கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற உறுதியை ஈரான் வழங்க வேண்டும் என்று கோரப்படுகிறது.

எண்ணெய் வளம் மட்டுமே ஈரான் பொருளாதாரத்தின் அடிப்படை என்பதால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ஈரானை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில், ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் என்று அதிபர் ட்ரம்ப் நம்புவதாகத் தெரிகிறது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரனின் பரிந்துரைய அமல்படுத்த ட்ரம்ப் தயாராகிவிட்டதாகவும், ஈரான் அதிபர் ஹசன் ராவ்ஹானியை, ஐ.நா பொதுசபைக் கூட்டத்தின் போது சந்திக்க பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் ஈரானின் பிரதமர் ஜாவத் சரிஃப், கடைசி நேரத்தில் வந்து கலந்து கொண்டார். அதிபர் ட்ரம்பின் இசைவு இல்லாமல் ஈரான் பிரதமரை, மேக்ரன் அழைத்து இருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் நீக்கமும் ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் மென்மையான போக்கை சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது.

விரைவில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படக்கூடும். ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு தடையில்லாமல் வரும்போது, கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

– வணக்கம் இந்தியா

From around the web