ட்ரம்ப் பதவி நீக்கம்: உறுப்பினர் அவையில் நிறைவேற்றம்.. விரைவில் செனட் அவையில் விசாரணை!

அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் அவை பதவி நீக்கம் செய்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது தடவையாக இத்தகைய பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதிபர் பதவியிலிருந்து நீக்குவது குறித்தான அடுத்த கட்ட விசாரணை செனட் அவையில் ஜனவரி மாதம் தொடங்கும். ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தவிர ஏனைய அனைவரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். நியூஜெர்ஸி மாநிலத்தின் ஜெஃப் வான் ட்ரூ
 

ட்ரம்ப் பதவி நீக்கம்: உறுப்பினர் அவையில் நிறைவேற்றம்.. விரைவில் செனட் அவையில் விசாரணை!

திகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் அவை பதவி நீக்கம் செய்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது தடவையாக இத்தகைய பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதிபர் பதவியிலிருந்து நீக்குவது குறித்தான அடுத்த கட்ட விசாரணை செனட் அவையில் ஜனவரி மாதம் தொடங்கும்.

ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தவிர ஏனைய அனைவரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். நியூஜெர்ஸி மாநிலத்தின் ஜெஃப் வான் ட்ரூ மற்றும் மினசோட்டா மாநிலத்தின் காலின் பேட்டர்சன், குடியரசுக் கட்சியினருடன் இணைந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஜூலை மாதம் 25ம் தேதி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியுடன் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். அப்போது, தன்னுடைய அரசியல் லாபத்திற்காக, உக்ரைன் அதிபருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் ட்ரம்ப் என்று அன்றைய தொலைபேசி உரையாடலின் குறிப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிந்ததாக ஜனநாயகக் கட்சியினர் கூறியுள்ளனர்.

அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், உறுப்பினர் அவையின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, திட்டமிட்டு இந்த தீர்மானங்களை ஜனநாயகக் கட்சியினர் நிறைவேற்றியுள்ளதாக, குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த கட்டமாக செனட் அவையில் ஜனவரி மாதம் விசாரணை தொடங்க உள்ளது. உறுப்பினர் அவை மேலாளர்களை சாட்சியாக சேர்க்கக் கூடாது என்று குடியரசுக் கட்சியின் செனட் அவைத் தலைவர் மிச் மெக்கனல் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிபர் அலுவலகத்தின் தொடர்புடனேயே செனட் அவை விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

செனட் அவையில் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படா விட்டாலும், உறுப்பினர்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதிபர் ட்ரம்ப் மீது அழியாத கறையாகவே வரலாற்றில் இடம் பெறும்.

இந்நிலையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மக்கள் ஆதரவு இருக்கிறது, குடியரசுக் கட்சியினர் உடன் இருக்கிறார்கள் என்று உற்சாகமாகப் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

https://www.A1TamilNews.com

From around the web