தனிமனித மத உரிமைகள் பாதுகாக்கப்படும்.. அதிபர் ட்ரம்ப் தீபாவளி செய்தி!

அமெரிக்க அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள தனிமனித வழிப்பாட்டு, மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், குத்துவிளக்கில் ஒளி ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய ட்ரம்ப், “ அனைத்து விதமான நம்பிக்கை வழிபாடுகளை கடைப்பிடிக்கும் உரிமையை வழங்கியுள்ள நம்முடைய அரசியல் சாசனத்தை என்னுடைய நிர்வாகம் தொடர்ந்து பாதுகாக்கும்,” என்று கூறினார். இந்த ஆண்டு முழுவதும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் மன அமைதி நிலவட்டும் என்று மனைவி
 

தனிமனித மத உரிமைகள் பாதுகாக்கப்படும்.. அதிபர் ட்ரம்ப் தீபாவளி செய்தி!மெரிக்க அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள தனிமனித வழிப்பாட்டு, மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், குத்துவிளக்கில் ஒளி ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய ட்ரம்ப், “ அனைத்து விதமான நம்பிக்கை வழிபாடுகளை கடைப்பிடிக்கும் உரிமையை வழங்கியுள்ள நம்முடைய அரசியல் சாசனத்தை என்னுடைய நிர்வாகம் தொடர்ந்து பாதுகாக்கும்,” என்று கூறினார்.

இந்த ஆண்டு முழுவதும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் மன அமைதி நிலவட்டும் என்று மனைவி மெலனியா ட்ரம்ப் மற்றும் அவருடைய சார்பில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த அதிகாரிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இந்த வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

 

From around the web